கழுத்தில் ஸ்கார்ப்.. கையில் ஸ்டாண்ட்.. மாஸாக களமிறங்கியிருக்கும் ரஜினி.. குவியும் லைக்ஸ்!

பேட்ட படத்தின் மோஷன் போஸ்டருக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

சென்னை: பேட்ட படத்தில் ரஜினியின் லுக் அவரது ரசிகர்களைக் குஷிப்படுத்தியுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படத்திற்கு பேட்ட எனப் பெயரிடப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சிம்ரன், திரிஷா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக் எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படத்தின் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் நேற்று வெளியானது.

குறியீடு

குறியீடு

இந்த மோஷன் போஸ்டரில் பேப்பர், பேனா, ஜாமெண்டரி பாக்ஸ் போன்றவை காற்றில் மிதந்தவண்ணம் இருக்கிறது. இப்படத்தில் ரஜினி கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார் எனக் கூறப்படுகிறது. எனவே, அதனைக் குறிப்பிடும் வகையில் இவை குறியீடாக பயன்படுத்தப் பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.

வயதான தோற்றம்:

வயதான தோற்றம்:

கபாலி, காலா என இதற்கு முந்தைய படங்கள் இரண்டிலும் வயதான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ரஜினி. இந்த இரண்டு படங்களிலுமே ஏறக்குறைய தாத்தா வேடத்தில் தான் அவர் நடித்திருந்தார். இது அவரது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமாகத் தான் இருந்தது.

லேசான தாடி:

லேசான தாடி:

இந்நிலையில், பேட்ட படத்தில் அதில் இருந்து விடுபட்டு மீண்டும் இளமையான தோற்றத்தில் நடித்துள்ளார் ரஜினி. லேசான தாடியுடன், கழுத்தில் ஸ்கார்ப் கட்டி தோற்றமளிக்கிறார். இது படத்தில் பிளாஷ் பேக்கில் வரும் தோற்றமா என்பது தெரியவில்லை. முன் பாதியில் சாதுவான கேரக்டரிலும், பின் பாதியில் அதிரடியான கேரக்டரிலும் என பாட்ஷா ஸ்டைலில் இப்பட்த்தில் ரஜினி நடிப்பதாகக் கூறப்படுகிறது.

சாதனை:

சாதனை:

கையில் ஆயுதத்துடன் மோஷன் போஸ்டரில் ரஜினியின் இந்த லுக் ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. மோஷன் போஸ்டர் வெளியான சிறிது நேரத்திலேயே அதனை சுமார் 2 லட்சத்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்தனர். தற்போது இந்த எண்ணிக்கை 13 லட்சமாக உயர்ந்துள்ளது.

டிரெண்டிங்:

டிரெண்டிங்:

இதேபோல், சுமார் 86 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக்ஸூம், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கமெண்டும் பதிவு செய்துள்ளனர். டிவிட்டரிலும் ரஜினி படத்தலைப்பான பேட்ட உலகளவில் டிரெண்டிங் ஆனது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X