திருமணம் காதலை முறித்துவிடும்.. பேட்ட நடிகரின் வித்தியாசமான அட்வைஸ்!

சென்னை: தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் வில்லனாக நடித்தவர் நவாசுதீன் சித்திக். பாலிவுட் சினிமாவில் முக்கியமான நடிகரான இவர், பல ஹிட் திரைப்படத்தில் நடித்து மாஸ் நடிகராக இருக்கிறார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இவர், திருமணத்திற்கு பின் காதல் நின்றுவிடுகிறது, காதலிக்க விரும்பினால் திருமணம் செய்து கொள்ளாதீர்கள் என்று தனது ரசிகர்களுக்கு அவர் அறிவுரை கூறியுள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பேட்ட படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு தெரிந்த முகமாக மாறியவர் நவாசுதீன் சித்திக். இவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, இரண்டாவதாக ஆலியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆன நிலையில் மூன்று குழந்தைகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஆலியா, நவாசுதீன் குடும்பத்தினர் தன்னை கொடுமை படுத்துவதாகவும், வீட்டை விட்டு வெளியில் விரட்டியதாகவும் கூறி, விவாகரத்து கோரி இருந்தார்.

nawazuddin siddiqui Petta

நவாசுதீன் சித்திக்: இந்த குற்றச்சாட்டை மறுத்த நவாசுதீன் சித்திக், நான் அமைதியாக இருப்பதால் கெட்டவனாக பார்க்கிறார்கள். நானும், ஆலியாவும் ஏற்கனவே விவாகரத்துத் செய்து விட்டோம். எனது குழந்தைகளை 45 நாட்களாக பள்ளிக்கு அனுப்பவில்லை. பணத்துக்காக பிள்ளைகளை ஆலியா துபாயில் இருந்து இந்தியா அழைத்துத் வந்து இருக்கிறாள். ஆலியாவுக்கு மாதம் ரூ.10 லட்சம் கொடுத்து வருகிறேன். கல்வி, மருத்துவம் உள்பட அனைத்துத் செலவுகளையும் கவனிக்கிறேன். ஆலியா தங்கி உள்ள வீட்டுக்கு வாடகை கொடுக்கிறேன். ஆலியாவுக்கு பணம்தான் முக்கியம். பணம் பறிக்க என்மீது வழக்குகளை போட்டு இருப்பதாக கூறியிருந்தார்.

காதல் இல்லை : இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நவாசுதீன் சித்திக், திருமணத்திற்கு பிறகு தம்பதிகளிடையே காதல் நின்று விடுகிறது, திருமணத்திற்கு பின் இருவரிடையே இருக்கும் நேசம் குறைந்து தொடங்குகிறது. அதற்கு முன் ஒருவர் மீது ஒருவருக்கு இருந்த அக்கறை குறைந்து அது சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. பேசினால் சண்டை வரும் என்ற நினைத்து பலர் பேசுவதே இல்லை. இதனால், ஆசை வார்த்தைகள், சாதாரண பேச்சுக்கூட காணாமல் போய் விடுகிறது.

திருமணம் காதலை முறித்துவிடும்: எனவே நீங்கள் யாரையாவது காதலித்தாலோ, அவர்களின் அன்பும், அவர்களின் காதலும் தொடர்ந்து உங்களுக்கு கிடைக்க வேண்டும் என நினைத்தாலோ திருமணம் செய்து கொள்ளாதீர்கள். திருமணம் என்பது உங்களின் காதலை முறித்துவிடும் என்று நடிகர் நவாசுதீன் சித்திக் பேசி உள்ளார். அவரின் இந்த பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த இணையவாசிகள் நீங்கள் சொல்வது உண்மை தான் என கருத்துக்களை பகிர்ந்து கமெண்ட் பாக்சை நிரப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X