அவர்தான் வேண்டும்.. அடம்பிடித்து வரவைத்த விஜய்.. தளபதி 64 படத்தில் கமிட் ஆன பேட்ட நடிகை!

நடிகர் விஜய் நடித்து வரும் 64வது படத்தில் பேட்ட படத்தில் நடித்த முக்கிய ஹீரோயின் ஒருவர் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது.

Recommended Video

Thalapathy 64 Movie Update : Villain Announced?

சென்னை: நடிகர் விஜய் நடித்து வரும் 64வது படத்தில் பேட்ட படத்தில் நடித்த முக்கிய ஹீரோயின் ஒருவர் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது.

பிகில் படத்திற்காக நடிகர் விஜய் ரசிகர்கள் தீவிரமாக காத்துக் கொண்டு இருக்கிறார்கள். அதே சமயம் விஜய் 64 படத்திற்கான பணிகள் இன்னொரு பக்கம் மிக தீவிரமாக நடந்து வருகிறது.

இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்தான் இந்த படத்தின் இயக்குனர். அனிரூத் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார். இந்த பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.

யார்

யார்

இந்த படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளார். இதற்காக அவரிடம் கால்ஷீட் வாங்கப்பட்டுள்ளது. படத்தில் இவருக்கு மிக முக்கியமான கேரக்டர் இருக்கும் என்று கூறி இருக்கிறார்கள். ஆனால் இதன் விவரம் வெளியாகவில்லை.

இன்னொரு நடிகர்

இன்னொரு நடிகர்

அதேபோல் இதே படத்தில் ராஷி கண்ணா நடிக்க உள்ளார். இவருக்கு படத்தில் இன்னொரு முக்கியமான கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது. படத்தின் இரண்டாவது பாதியில் இவரை வைத்து கதை நகரும் என்றும் கூறுகிறார்கள்.

செம

செம

இந்த நிலையில்தான் இதே படத்தில் தற்போது மாளவிகா மோகன் நடிக்க இருக்கிறார் என்றும் செய்திகள் வெளியாகி வருகிறது. இதற்கான பேச்சுகள் நடந்து வருகிறது. மாளவிகா மோகன் கடைசியாக தமிழில் பேட்ட படத்தில் சசிகுமார் மனைவி பாத்திரத்தில் நடித்தார்.

விஜய் கேட்டு வாங்கினார்

விஜய் கேட்டு வாங்கினார்

இந்த மூன்றாவது ரோலுக்கு யாரை போடுவது என்று இயக்குனர் ஆலோசனை நடத்தி உள்ளார். அப்போது விஜய்தான் நடிகர் மாளவிகா மோகனனை பரிந்துரை செய்துள்ளார். பேட்ட படத்தில் அவரின் நடிப்பை பார்த்துவிட்டு விஜய்தான் மாளவிகா மோகனன் வேண்டும் என்று லோகேஷ் கனகராஜிடம் பரிந்துரை செய்துள்ளார்.

இப்படியா

இப்படியா

லோகேஷ் கனகராஜ் கடைசியாக இயக்கிய மாநகரம் படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் நடித்து இருந்தனர். படத்தில் 10க்கும் அதிகமான முக்கிய பாத்திரங்கள் இருந்தனர். ஆனால் படத்தில் எல்லோருக்கும் சமமாக வாய்ப்பு வழங்கப்பட்டு இருந்தது.

மாநகரம்

மாநகரம்

மாநகரம் படத்தில் ஒருவர் இல்லையென்றாலும் கதை நகராது என்ற வகையில் அதன் திரைக்கதை உருவாக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அதேபோல்தான் விஜய் 64 படமும் எடுக்கப்பட்டு வருகிறதாம். அதனால்தான் இந்த படத்தில் மூன்று ஹீரோயின்கள் இருக்கிறார்கள்.

ஆனால் யார்?

ஆனால் யார்?

ஆனால் அதே சமயம் விஜய்க்கு இந்த படத்தில் யார் ஜோடி என்பது இன்னும் உறுதியாகவில்லை. முதலில் ராஷ்மிகா மந்தனாதான் விஜய் ஜோடி என்று கூறப்பட்டது. ஆனால் இன்னும் அது உறுதியாகவில்லை யார் வேண்டுமானாலும் விஜய்க்கு ஜோடியாக வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X