விஜய்க்கு ஏற்பட்ட அதே பிரச்சனை தற்போது ரஜினிக்கும்: பாவம் அவர்
சென்னை: ரஜினியின் பேட்ட படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் பேட்ட. படத்தின் புகைப்படங்களை பார்த்தால் இது பேட்ட போன்று தெரியவில்லை பாட்ஷா 2 போன்று இருக்கிறது என்கிறார்கள் ரசிகர்கள்.
இந்நிலையில் பேட்ட படக்குழு அதிர்ச்சி அடையும்படி ஒரு விஷயம் நடந்துள்ளது.
விஜய் சேதுபதி
கையில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு விஜய் சேதுபதி நடந்து வரும் காட்சி வீடியோ கசிந்து சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்படுகிறது. இந்த வீடியோ கசிந்ததை பார்த்து படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. படப்பிடிப்பு நடக்கும்போது இது போன்ற வீடியோக்கள் கசிவது வழக்கமாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் படங்களுக்கு தான் இந்த பிரச்சனை அதிகம் உள்ளது.

சசிகுமார்
பேட்ட படத்தில் சசிகுமாரும் நடிக்கிறார். பிளாஷ்பேக்கில் ரஜினிக்கு நண்பேன்டாவாகவும், த்ரிஷாவுக்கு அண்ணனாகவும் நடிக்கிறாராம் சசிகுமார். இந்த தகவலை ரகசியமாக வைத்திருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறது படக்குழு. வீடியோவை போன்று இந்த தகவலும் கசிந்துவிட்டது பாஸ். சூதானமாக இருங்க.

த்ரிஷா
பேட்ட படத்தில் சிம்ரன் பிளாஷ்பேக்கில் வருகிறார் என்று கூறப்பட்டது. சிம்ரனும், த்ரிஷாவும் சேர்ந்து வரும் காட்சிகள் எதுவும் கிடையாதாம். இந்நிலையில் த்ரிஷாவும் பிளாஷ்பேக்கில் மட்டும் தான் வருகிறாரா?. அப்படி என்றால் மாளவிகா மோகனன் தான் ஹீரோயினா? என்று பல கேள்விகள் எழுகின்றன.

ரஜினி
ஒரு வழியாக ரஜினி படத்தில் நடிப்பதால் த்ரிஷா மகிழ்ச்சி அடைந்துள்ளார். ரஜினி மிகவும் இளமையாக தெரிவதால் தானும் இளமையாக இருக்க தனது உடல் எடையை குறைத்து நடித்துள்ளார் த்ரிஷா. ரஜினியுடன் நடிப்பதால் தான் சினிமாவுக்கு வந்த பலனை அடைந்துவிட்டதாக கூறுகிறார் த்ரிஷா. அதற்காக இந்த படத்தோடு நடிப்புக்கு முழுக்கு போடுவார் என்று அர்த்தம் இல்லை.


Click it and Unblock the Notifications











