”பேட்ட”... வெளியானது ரஜினி - கார்த்திக் சுப்புராஜ் பட டைட்டில்!
ரஜினியின் புதிய படத்திற்கு ‘பேட்ட’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் புதிய படத்திற்கு , 'பேட்ட' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
காலா படத்தை அடுத்து, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். காலா திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறாததால், இந்த படத்தை அதிரடி மாஸ் படமாக எடுத்து வருகிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு டேராடூன், டார்ஜிலிங் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. மதுரையிலும் படப்பிடிப்பு நடக்க இருந்தது. ஆனால் சில காரணங்களால் சென்னை புறநகரில் பிரம்மாண்ட செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ரஜினி நடிக்க வேண்டிய பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் மற்றும் திரிஷா நடிக்கின்றனர். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். பாபி சிம்ஹா, நவாசுதின் சித்திக், குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்திற்கு பேட்ட எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை தங்களது டிவிட்டர் பக்கத்தில் சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. கூடவே இப்படத்தின் பர்ஸ்ட் மோஷன் பிக்சரும் வெளியாகியுள்ளது. ரஜினியின் 165வது படமாக இது உருவாகி வருகிறது.
ரஜினியின் படத்தலைப்பு வெளியானதால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தங்கள் மகிழ்ச்சியினை அவர்கள் சமூகவலைதளப் பக்கங்கள் வழியாக வெளிப்படுத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications