பேட்ட: ரஜினி கெத்து, ஜித்து மாஸ், பாபி சிம்ஹா காமெடி பீஸ்
சென்னை: பேட்ட படத்தில் ரஜினி மாஸாக உள்ளார் என்று நம் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சசிகுமார், சிம்ரன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள பேட்ட படம் இன்று ரிலீஸாகியுள்ளது.

படம் பார்க்க தியேட்டருக்கு சென்றுள்ள நம் செய்தியாளர் கூறியதாவது,
* ரஜினியின் என்ட்ரி காட்சி செம மாஸாக இருந்தது. பல ஆண்டுகள் கழித்து அவருக்கு இப்படி ஒரு மாஸ் ஓபனிங் காட்சி கிடைத்துள்ளது.
* ரஜினியை மாஸாக காட்டினாலும் வயதானவராக தெரிகிறார். பேட்ட படத்திற்கு ரஜினியின் காமெடி கை கொடுத்துள்ளது.
* சிம்ரன் அழகாக உள்ளார். மங்களமாக நடித்துள்ள அவருக்கு இது மங்களகரமான செகண்ட் இன்னிங்ஸ்.
* சிம்ரன், ரஜினி வரும் இளமை திரும்புதே பாடல் செம ரொமான்டிக்காக இருந்தது.
* ஓபனிங் காட்சியில் இருந்தே ரஜினி பன்ச் மேல் பன்ச் வசனம் பேசுகிறார்.
* ஜித்துவாக நடித்துள்ள விஜய் சேதுபதியின் என்ட்ரி அருமை.
* பாபி சிம்ஹா காமெடி பீஸாக உள்ளார். ரொம்ப காலம் கழித்து பழைய ரஜினியை திரையில் பார்த்த திருப்தி ஏற்பட்டுள்ளது.
* இரண்டாவது பாதியில் வரும் ஃபிளாஷ்பேக் சிறப்பு.
* இரண்டாம் பாதியில் நிறைய சர்பிரைஸ் வைத்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.


Click it and Unblock the Notifications











