பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் ஆகுமா, ஆகாதா?

Recommended Video

தள்ளிப்போகும் பேட்ட திரைப்பட ரிலீஸ்- வீடியோ

சென்னை: ரஜினிகாந்தின் பேட்ட திரைப்பட ரிலீஸ் தள்ளிப்போகும் என்பதற்கான காரணம் தெரிய வந்துள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் பேட்ட. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிகட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இத்திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவலின்படி பொங்கலுக்கு வெளியாகாது என சொல்லப்படுகிறது.

Petta release may get postponed

காரணம் என்னவென்றால், அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது. அதனால் திரையரங்குகள் பங்கீடு போன்றவை எதிர்பார்த்தபடி நடக்குமா என கேள்வி எழுகிறது. மேலும் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.0 திரைப்படம் இம்மாத இறுதியில் வெளியாகிறது. 2.0 திரைப்படம் வெளியாகி அடுத்த ஒன்றரை மாத இடைவெளியில் மீண்டும் ஒரு ரஜினிபடத்தை வெளியிட சன் பிக்சர்ஸ் விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த இரண்டு காரணங்களால் பேட்ட திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை சன் பிக்சர்ஸ் மாற்றலாம் என சொல்லப்படுகிறது. பேட்ட திரைப்படத்தில் விஜய் சேதுபதி, நவாஸுதின் சித்திக்கி, சிம்ரன், த்ரிஷா, மேகா ஆகாஷ், சசிகுமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X