முறுக்கு மீசை.. வெள்ளைச் சிரிப்புடன் ரஜினி.. வெளியானது பேட்ட 2வது லுக்!
Recommended Video

சென்னை: பேட்ட திரைப்படத்தின் இரண்டாவது லுக் வெளியாகியுள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் திரைப்படம் பேட்ட. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது லக்னோவில் நடைபெற்று வருகிறது.
அப்படப்பிடிப்பில் இருக்கும் ரஜினிகாந்தின் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி வைரலாகின. செம்ம ஸ்டைலிஷாக இளமைத் தோற்றத்தில் இருந்தார்.

இந்த நிலையில் தற்போது இரண்டாவது லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். லக்னோ படப்பிடிப்பில் பார்த்த ரஜினிக்கும் அப்படியே நேரமாறாக இருக்கிறார்.
கழுத்தில் ஒரு தங்க செயின், வெள்ளை சட்டை நெற்றியில் விபூதி பட்டை என அருணாச்சலம் படத்தில் வரும் ரஜினியை ஞாபகப்படுத்துகிறார். ஆனால் ரஜினியின் மீசை சற்று கீழே இறங்கி கொஞ்சம் கிருதாவை ஆக்கிரமித்து மாஸாக இருக்கிறது. லைட்டாக துரைசிங்கம் ஞாபகம் வருகிறது.
ஊருக்குள் கம்பீர நடைபோடும் சிம்ப்ளிசிட்டியை விரும்பும் பெரும்புள்ளி போல காட்சி தருகிறார் ரஜினிகாந்த். தலைவர் வேற லெவல் என ரஜினி ரசிகர்கள் ரீட்விட் செய்துவருகின்றனர்.
பேட்ட திரைப்படத்தில், ரஜினியுடன் சிம்ரன், த்ரிஷா, மேகா ஆகாஷ், விஜய் சேதுபதி, நவாசுதின் சித்திக், பாபி சிம்ஹா, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.


Click it and Unblock the Notifications











