ரஜினி ரசிகர்கள் கொண்டாட தயாராகுங்க.... டிசம்பர் 28ம் தேதி 'பேட்ட' டிரைலர்!
சென்னை : ரஜினியின் பேட்ட திரைப்படத்தின் டிரைலர் வரும் 28 தேதி வெளியாகிறது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில், விஜய் சேதுபதி, திரிஷா, சிம்ரன், நவாசுதின் சித்திக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படம் வரும் பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 10ம் தேதி வெளியாகிறது. பேட்ட படத்தின் புரோமோஷனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஏற்கனவே தொடங்கிவிட்டது.
இப்படத்தின் மோஷன் போஸ்டர், முதல் பார்வை, டீசர் உள்ளிட்டவை ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் பேட்ட திரைப்படத்தின் டிரைலர் வரும் 28ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ஏற்கனவே ரஜினி பிறந்தநாளை யொட்டி வெளியாக டீசர் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடதக்கது.


Click it and Unblock the Notifications











