Petta trailer: நிச்சயமா இது ரஜினியின் 'பேட்ட' தான்... டிரைலர் சுவாரஸ்யங்கள்!

ரஜினி நடித்துள்ள பேட்ட படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

Recommended Video

Petta Trailer | Rajinikanth | மாஸ் பண்ணும் பேட்ட ட்ரெய்லர்

சென்னை : ரஜினி நடித்துள்ள பேட்ட திரைப்படத்தில் டிரைலரில் நிறைய சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கின்றன.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாப்படுபவர் ரஜினிகாந்த். இவரது ஸ்டைல் தான் இவருடைய மிகப்பெரிய பலம்.

ஆரம்ப காலத்தில் இருந்து, அதாவது 16 வயதினிலே படத்தில் இருந்தே ரஜினிக்கென ஒரு தனி ஸ்டைல் இருக்கும். அதேபோல வின்னலாக இருந்த காலத்தில் இருந்தே அவர் பேசும் பஞ்ச் டயலாக்குகளுக்கு தனி ரசிகர் கூட்டம் உண்டு.

இந்த ரஜினியை தான் அவரது ரசிகர்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள். சமீபத்தில் வெளியான 2.0 படத்தில் கூட ரஜினியின் துள்ளலான நடிப்பு தான் பலராலும் ரசிக்கப்பட்டது.

நடுவில் அவரது வயதுக்கு ஏற்ப, கபாலி, காலா போன்ற படங்களில் நடித்தார். ஆனால் அது அவரது ரசிகர்களிடையே பெரியதாக எடுபடவில்லை.

அறுசுவை விருந்து

அறுசுவை விருந்து

இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜின் பேட்ட திரைப்படம் ரஜினி ரசிகர்களுக்கு அறுசுவை விருந்து படைக்கும் என்ற கூறலாம். இன்று வெளியான பேட்ட டிரைலரில் அந்த அளவுக்கு சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கின்றன.

ரஜினியின் கூலிங் கிளாஸ்

ரஜினியின் கூலிங் கிளாஸ்

ரஜினி கூலிங் கிளாஸ் போடுவதே தனி ஸ்டைல் தான். சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் ஈர்க்கப்பட்ட விஷயம் அது. அந்த கூலிங் கிளாஸ் மாட்டும் காட்சி இந்த படத்தில் இருக்கிறது. உண்மையிலேயே மீண்டும் பழைய ரஜினியை பார்த்த உணர்வு வருகிறது.

ரஜினியின் பஞ்ச் டயலாக்

ரஜினியின் பஞ்ச் டயலாக்

ரஜினியின் பஞ்ச் டயலாக் அவரது ரசிகர்களுக்கு மிகப் பெரிய விருந்தாக இருக்கும். அந்த வகையில் இந்த படத்தில் ரஜினிக்கு நிறைய பஞ்ச் டயலாக்குகள் பேசுகிறார்.

ரஜினியின் காஸ்ட்யூம்

ரஜினியின் காஸ்ட்யூம்

படத்தில் ரஜினி அணிந்து வரும் உடைகள் அனைத்தும் அந்தந்த காலகட்டத்தின் பேஷனாக மாறும். இளைஞர்கள் பலரும் ரஜினி ஸ்டைலில் சுற்றித்திரிவதை 80, 90 கிட்ஸ் பார்த்திருக்க முடியும். இந்த படத்தில் ரஜினியின் காஸ்ட்யூம் நிச்சயம் டிரெண்டாகும் என்றே சொல்லலாம்.

ரஜினியின் காமெடி

ரஜினியின் காமெடி

மற்ற நடிகர்களைவிட ரஜினிக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். அதனாலேயே அவருக்கு நிறைய குழந்தைகள் ரசிகர்களாக இருக்கிறனர். இந்த டிரைலரில் ஒரு சில காட்சிகள் அந்த ரிஜினியிசத்தை நிரூப்பிக்கின்றன.

ரஜினியின் ஆக்ஷ்ன்

ரஜினியின் ஆக்ஷ்ன்

காமெடி ஒரு பக்கம் இருந்தாலும், ரஜினியின் ஆக்ஷன் காட்சிகளுக்கு என தனி ரசிகர் கூட்டமே உண்டு. பறந்து பறந்து, வித்தியாச வித்தியாசமாக அவர் போடும் சண்டை காட்சிகள் அந்த காலத்தில் இருந்து டிரெண்ட செட்டராக அமைந்திருக்கின்றன. அந்த வகையில் இந்த டிரைலரை பார்க்கும் போது, அந்த பழைய ரஜினியின் ஆக்ஷன் காட்சிகளை மீண்டும் பார்க்க முடியும் என்றே தோன்றுகிறது.

ரஜினியின் டான்ஸ்

ரஜினியின் டான்ஸ்

அதேபோல் ரஜினியின் நடனத்துக்கு என தனி ஸ்டைல் உண்டு. ரொம்ப கஷ்ப்படாமல், அவர் செய்யும் ஒரு சில சேஷ்ட்டைகள் சூப்பர் ஹிட் ஸ்டெப்புகளாக மாறியிருக்கின்றன. இந்த டிரைலரில் வரும் ஒரு பாடல் காட்சியில், முனிஸ்காந்தின் வயிற்றில் நடனமாடியபடிய ரஜினி குத்தும் காட்சிகள் செம வைரலாக வாய்ப்புகள் அதிகம்.

இதர ஸ்டைல் காட்சிகள்

இதர ஸ்டைல் காட்சிகள்

வில்லன் நடிகர் ராமை துப்பாக்கி முனையில் அமரவைத்து, ஏரிக்கரையில் ஸ்டைலாக நின்றுகொண்டு, கையில் இருக்கும் துப்பாக்கியை ரஜினி சுழற்றும் காட்சி, அவரது ரசிகர்களுக்கு கண்கொள்ளாக்காட்சி. அதேபோல் சிம்ரனுடன் பேசும் போது, ஐயய்யோ இது நல்லாலிருக்கே என ரஜினி கூறும் அந்த இடம், மன்னனை ஞாபகப்படுத்துகிறது.

ஸ்வீட் நிச்சயம்

டிரைலரே இப்படி என்றால் மெயின் பிக்சர் எப்படி இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு எகிறுகிறது. மீண்டும் பழைய ரஜினியை திரைக்கு கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர். கார்த்திக் சுப்புராஜ். இந்த பொங்கலுக்கு ஸ்வீட் நிச்சயம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X