Petta Trailer: கொல காண்டுல இருக்கேன் கொல்லாம விட மாட்டேன், மாஸ் காட்டும் ரஜினி
Recommended Video

சென்னை: பேட்ட படத்தின் ட்ரெய்லர் முன்கூட்டியே வெளியிடப்பட்டுள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள பேட்ட படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் பேட்ட படத்தின் ட்ரெய்லர் இன்று காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே படத்தின் ட்ரெய்லர் லீக்காகி வைரலானது.
நேரம் மாற்றம்
பேட்ட ட்ரெய்லரை சன் பிக்சர்ஸ் வெளியிடும் முன்பே யாரோ விஷமிகள் லீக் செய்துவிட்டனர். இந்நிலையில் ட்ரெய்லர் வெளியீட்டு நேரத்தை 11 மணியில் இருந்து 10. 25 மணிக்கு மாற்றியது சன் பிக்சர்ஸ்.
பேட்ட
20 பேரை அனுப்பி வச்சேன், எல்லோரையும் அடிச்சு துவச்சிட்டான் என்று விஜய் சேதுபதி சொல்வது போன்று பேட்ட ட்ரெய்லர் துவங்குகிறது. ரஜினி ஒரு சேரில் அமர்ந்து மாஸ் காட்டுகிறார். பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த என்று பன்ச் வசனம் பேசுகிறார் ரஜினி. சிறப்பான தரமான சம்பவங்களை இனி தான் பார்க்கப் போகிற, கொல கண்டுல இருக்கிறேன் கொல்லாம விட மாட்டேன் என்கிறார் ரஜினி. ரஜினியை இளமையாகவும், ஸ்டைலாகவும் காட்டியுள்ளார் இயக்குனர்.
ரசிகர்கள்
ட்ரெய்லர் மாஸாக உள்ளது. ரஜினி ரசிகர்களுக்கு பேட்ட நிச்சயம் செம விருந்தாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
ரஜினி
ட்ரெய்லர் லீக்கானதால் பேட்ட படம் ஹிட்டாம்.


Click it and Unblock the Notifications











