'சிறப்பான தரமான சம்பவங்கள இனிமேல் தான் பார்க்க போற'.... காளியின் ஆட்டம் ஆரம்பம் 'பேட்ட'! டிரைலர்
ரஜினி நடித்துள்ள பேட்ட படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
சென்னை : ரஜினி நடித்துள்ள பேட்ட திரைப்படத்தின்டிரைலர் இணையத்தில் வெளியாகியுள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள பேட்ட திரைப்படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதற்கு காரணம் இந்த படத்தில் ரஜினியுடன் விஜய் சேதுபதி, நவாசுதின் சித்திக், பாபி சிம்ஹா, திரிஷா, சிம்ரன் என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்திருப்பது தான்.
இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. வழக்கமாக வெள்ளிக்கிழமைகளில் படம் தான் ரிலீசாகும். ஆனால் இந்த வாரம் பேட்ட டிரைலர் ரிலீசாகி பரபரப்பை கிளப்பியிருக்கிறது.

பேட்ட டிரைலர் செம மாசாக இருக்கிறது. கிட்டத்தட்ட நம்ம பாட்ஷா படத்தில் இரண்டாம் பாகத்தை பார்ப்பது போலவே இருக்கிறது. காரணம் என்னவென்றொல், டிரைலர் தொடக்கத்தில் இருந்து ரஜினிக்கு அளிக்கப்படும் பில்டப்புகள் அந்த உணர்வை ஏற்படுத்துகின்றன.
'அடிச்சு அண்வேரோட ஓடவிட்ருவேன் பாத்துக்கோ, மானம் போன திரும்ப வராது', 'சிறப்பான தரமான சம்பவங்கள இனிமேல் தான் பார்க்க போற', 'டேய் எவனுக்காவது பொண்டாட்டி புள்ளக்குட்டின்னு செண்டிமெண்ட் இருந்தா அப்டியே ஓடிப்போயிடு... கொல காண்டுல இருக்கேன் மகனே கொல்லாம விடமாட்டேன் ', 'ஸ்வீட் சாப்பிடப்போறோம்' என டிரைலரில் வரும் வசனங்கள் செம மாஸாக இருக்கின்றன.
ரஜினியின் தோற்றம் செம ஸ்டைலாக இருக்கிறது. வயசானாலும் உன் ஸ்டைலும், அழகும் குறையலங்கிற படையப்பா டயலாக் தான் நியாபகத்துக்கு வருகிறது. பஞ்ச் டயலாக், அதிரடி ஆக்ஷ்ன், துள்ளல் நடிப்பு என பழைய ரஜினியை பார்க்க முடிகிறது. அதுவும் டிரைலர் முடியும் போது ஸ்டைலாக அவர் நடந்து வரும் காட்சி ஒன்று போதும்... ரஜினி ரசிகர்களுக்கு செம தீனி.
[2018ம் ஆண்டின் சூப்பர் "ஸ்டார்ஸ்" யாரு.. வாங்க.. ஓட்டுப் போடுங்க!]
விஜய் சேதுபதி ஒரு பக்கம் சிரிக்க, மற்றொரு பக்கம் ரஜினி சிரிக்க என இருவருக்குமான இந்த சிரிப்பு காட்சி சிறப்பு. ஓரிரு நொடிகள் மட்டுமே வந்தாலும் நவாசுதின் சித்திக்கின் தோற்றம் வியக்க வைக்கிறது. விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தை முழுமையாக கணிக்க முடியவில்லை. நிச்சயமாக படத்தில் சர்ப்ரைஸ் காத்திருக்கிறது போல.
பாபி சிம்ஹா கல்லூரி மாணவனாக வருகிறார். அவருக்கும் நிறைய ஸ்கோப் இருப்பதாகவே தெரிகிறது. திரிஷாவுக்கு ஒரேயொரு ஷாட் மட்டும் தான். ஆனால் அதிலேயே மனம் கவர்கிறார். அவரது ரோலையும் சன்பென்ஸாக வைத்திருக்கிறார்கள்.
சிம்ரன் செமையாக ஸ்கோர் செய்கிறார். நிச்சயம் இந்த படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்து ரீஎண்ட்ரிக்கு கைக்கொடுக்கும் என நம்பலாம். ஏனெனில், ரஜினியுடனான காதல் காட்சிகள் அருமையாக அமைந்திருக்கின்றன.
படம் வெவ்வேறு களங்களில் நடப்பதை டிரைலர் பார்க்கும் போது அறிய முடிகிறது. அனிருத்தின் இசை டிரைலரின் டெம்போவை கூட்டுகிறது. மிக அற்புதமான உழைப்பு.
டிரைலரின் எடிட்டிங் மிக அருமையாக இருக்கிறது. டிரைலரிலேயே காட்டிவிட்டார்கள் இது முழுக்க முழுக்க ரஜினி படம் என.
மீண்டும் பழைய ரஜினியை திரைக்கு கொண்டு வந்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். படம் அதிரடி ஆக்ஷனுடன் செம மாஸாக இருக்கும் என்ற எதிர்பார்பை உருவாக்கி இருக்கிறார். பிறகு என்ன பொங்கலுக்கு நிச்சயம் ஸ்வீட் சாப்பிடலாம்....


Click it and Unblock the Notifications











