ட்விட்டரை உலக அளவில் அதிர வைத்த பேட்ட ட்ரெய்லர் #PettaTrailer
Recommended Video

சென்னை: பேட்ட ட்ரெய்லர் ட்விட்டரில் உலக அளவில் 6வது இடத்தில் டிரெண்டாகியுள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்த்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட படத்தின் ட்ரெய்லர் இன்று காலை 10. 25 மணிக்கு வெளியிடப்பட்டது. ட்ரெய்லர் ரஜினி ரசிகர்களுக்கு மட்டும் அல்ல அனைத்து ரசிகர்களுக்கும் பிடித்துள்ளது.
ரொம்ப நாள் கழித்து ரஜினியை பழைய மாதிரி பார்த்த ஃபீல் கிடைத்துள்ளது.
பேட்ட
பேட்ட ட்ரெய்லர் ரிலீஸாகியுள்ள நிலையில் ட்விட்டரில் உலக அளவில் 6வது இடத்திலும், இந்தியா அளவில் முதலிடத்திலும் டிரெண்டாகியுள்ளது. இது தவிர #GetRajinified #SuperstarRajinikanth #PettaPongalParaak ஆகிய ஹேஷ்டேகுகளும் இந்தியா அளவில் டிரெண்டாகியுள்ளன.
மகிழ்ச்சி
பேட்ட பட ட்ரெய்லர் வெளியாகிய 40 நிமிடத்தில் அதை யூடியூபில் 10 லட்சம் பேர் பார்த்துள்ளனர். பேட்ட படம் நிச்சயம் ஹிட்டாகிவிடும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் வந்துவிட்டது.
தனுஷ்
பேட்ட ட்ரெய்லரை பார்த்துவிட்டு ரசிகர்கள் மட்டும் அல்ல தலைவர் வெறியனான தனுஷாலும் மகிழ்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை.
இளமை
தலைவர் இஸ் பேக்


Click it and Unblock the Notifications











