Petta review - "பிரேமுக்கு பிரேம் ரஜினியிசம்... இதுதான் நம்ம தலைவர் படம்"... கொண்டாடும் ரசிகர்கள்!
ரஜினியின் பேட்ட படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல விமர்சனம் கிடைத்து வருகிறது.
Recommended Video

சென்னை: ரஜினியின் பேட்ட படம் நன்றாக இருப்பதாக அதன் முதல்காட்சி பார்த்த ரசிகர்கள் டிவிட்டரில் விமர்சித்து வருகின்றனர்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள பேட்ட படம், பொங்கலையொட்டி இன்று ரிலீசாகியுள்ளது. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன், திரிஷா என இரண்டு நாயகிகள். இவர்கள் தவிர விஜய்சேதுபதி, நவாசுதீன் சித்திகி, பாபி சிம்ஹா, சசிகுமார் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.
அனிருத் இசையில் இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டடித்துள்ளன. படத்தின் டீசர் மற்றும் டிரைலரே மாபெரும் ஹிட்டடித்ததால், பேட்ட படத்தைப் பார்க்க ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், இன்று ரிலீசாகியுள்ள முதல் காட்சியைப் பார்த்த ரசிகர்கள் ரஜினி நடிப்பை சிலாகித்து சமூகவலைதளங்களில் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
இது தான் தலைவர் படம்:
"இது தான் நம்ம தலைவர் படம். ஆனந்தக் கண்ணீர் வருகிறது. கார்த்திக் சுப்புராஜுக்கு நன்றிகள்" என பேட்ட படத்தின் இடைவேளை வரை பார்த்த இந்த ரசிகர் தெரிவித்துள்ளார்.
பிரேமுக்கு பிரேம்:
"இந்த பத்தாண்டுகளில் வந்த ரஜினியின் மிகச் சிறந்த படம் இது தான். படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் ரஜினியிசம் உச்சத்தில் இருக்கிறது. நன்றி கார்த்திக் சுப்புராஜ்' என்கிறார் இந்த ரசிகர்.
அனிருத் செம:
அனிருத்தின் இசை நன்றாக இருப்பதாகவும், ஒவ்வொரு காட்சியும் ரசிகர்கள் ரசிக்கும்படி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் இவர்.
படம் மரணமாஸ்:
பேட்ட படம் மரணமாஸாக இருக்கிறது எனக் கூறுகிறார் இந்த ரசிகர்.


Click it and Unblock the Notifications











