பேட்ட, விஸ்வாசம்.. 2 நாள் வசூலில் எது பாக்ஸ்ஆபிஸ் ஹிட் தெரியுமா?

பாக்ஸ் ஆபிசில் தமிழகத்தைப் பொறுத்தவரை பேட்ட படத்தைவிட விஸ்வாசம் அதிகளவில் வசூலித்து வருகிறது.

Recommended Video

தமிழகத்தில் வசூலில் விஸ்வாசம் தான் முன்னிலை- வீடியோ

சென்னை: உலகளவில் விஸ்வாசம் படத்தைவிட பேட்ட படத்தின் வசூல் அதிகமாக இருப்பதாகத் தெரியவந்துள்ளது. ஆனால், தமிழகத்தில் இரண்டாவது நாளில் பேட்ட வசூல், விஸ்வாசம் வசூலைவிட குறைவாகவே உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொங்கலையொட்டி ரஜினியின் பேட்ட மற்றும் அஜித்தின் விஸ்வாசம் படங்கள் ரிலீசாகியுள்ளன. பொங்கல் விடுமுறை இன்று முதல் தான் ஆரம்பிக்கிறது. ஆனால் வேலை தினங்களான கடந்த இரண்டு நாட்களிலேயே இந்த இரண்டு படங்களுக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இனி தொடர்ந்து ஆறு நாட்கள் விடுமுறை வர இருப்பதால், இந்த வசூல் நிலவரம் மேலும் எகிறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பேட்ட மற்றும் விஸ்வாசம் படத்தின் முதல் இரண்டு நாட்கள் வசூல் விபரம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில்:

தமிழகத்தில்:

தமிழகத்தைப் பொறுத்தமட்டில் வசூலில் விஸ்வாசம் தான் முன்னிலையில் உள்ளது. பேட்ட முதல் நாளில் ரூ. 13 கோடியும், இரண்டாவது நாளில் ரூ.9 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் 2 நாட்களில் ரூ.22 கோடி அளவிற்கு பேட்ட படம் வசூல் செய்துள்ளது. ஆனால், விஸ்வாசம் இந்த இரண்டு நாட்களில் ரூ. 26 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிசில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

சென்னையில்:

சென்னையில்:

சென்னை பகுதி விநியோக பகுதியில் முதல் நாளில் 1.12 கோடி ரூபாய் வசூலித்திருந்தது பேட்ட. ஆனால் விஸ்வாசம் படம் ஒரு கோடியை கூட தாண்டவில்லை. பேட்ட படம் இரண்டாவது நாளில் சென்னையில் 1.08 கோடி வசூலித்துள்ளது. ஆனால் விஸ்வாசம் 86லட்சம் மட்டுமே வசூலித்துள்ளது என கூறப்படுகிறது. இதன்மூலம் இரண்டாவது நாளிலும் பேட்ட படம் தான் டாப் இடத்தை பிடித்துள்ளது.

உலகளவில்:

உலகளவில்:

தமிழகத்தில் விஸ்வாசம் வசூல் குவிப்பது போல வெளிநாடுகளில் பேட்ட வசூல் சாதனை செய்து கொண்டிருக்கிறது. பேட்ட படம் ரிலீசான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ. 48 கோடி வசூலித்துள்ளது. விஸ்வாசம் உலக அளவில் ரூ. 43 கோடி வசூல் செய்துள்ளது. பேட்ட படம் அமெரிக்காவில் ஒரு மில்லியன் டாலர்கள் வசூல் செய்துள்ளது. ஆனால் ‘விஸ்வாசம்‘ படம் இதுவரை 83 ஆயிரம் டாலர்கள் தான் வசூல் செய்துள்ளது.

விநியோகஸ்தர்கள் கருத்து:

விநியோகஸ்தர்கள் கருத்து:

இப்போதுள்ள வசூலை வைத்து சொல்ல வேண்டுமானால், பேட்ட, விஸ்வாசம் என இரண்டுமே சரி சமமாக வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கிறோம். விடுமுறை தினங்கள் முடிந்தபின், ஒருபடம் மற்றொரு படத்தைவிட அதிகபட்சம் 20 சதவீதம் வசூலில் முந்தும் என்பதே விநியோகஸ்தர்களின் கணிப்பு.

உண்மை நிலவரம்:

உண்மை நிலவரம்:

மொத்தத்தில் உலக பாக்ஸ் ஆபிஸில் பேட்ட படத்துடன்(ரூ.48 கோடி), விஸ்வாசம் தோற்றுவிட்டது. ஆனால் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிசில் பேட்ட படத்தை(ரூ.23 கோடி), விஸ்வாசம் தோற்கடித்து விட்டது என்றே கூறவேண்டும். ஆனால், ஒரு வாரத்திற்குப் பிறகு தான் உண்மையான வசூல் நிலவரம் தெரிய வரும். ஏனெனில் இடையில் தியேட்டர்களின் எண்ணிக்கை கூடலாம் அல்லது குறையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X