ரஜினியுடன் மோதும் அஜித்... பொங்கல் நமக்கு செம எண்டர்டெயின்மெண்ட் தான்!

பேட்ட திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

Recommended Video

வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் தலைவர் பேட்ட மற்றும் தல விசுவாசம்- வீடியோ

சென்னை: பேட்ட திரைப்படம் விஸ்வாசம் திரைப்படத்தோடு மோதிக்கொள்ளப்போகிறது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் பேட்ட திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது லக்னோவில் நடைபெற்று வருகிறது.

Petta and Viswasam clash!

படக்குழுவினர் விரைந்து படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். இப்படத்தில் விஜய் சேதுபதி, நவாசுதின் சித்திக் போன்றவர்கள் வில்லனாக நடித்திருப்பதால் வழக்கமான ரஜினி படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பை விட பல மடங்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

[ கண்பார்வையற்ற கொலைகாரனாக உருமாறும் விக்ரம்... ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்கிறார்! ]

போதாகுறைக்கு, சிம்ரன், த்ரிஷா, மேகா ஆகாஷ் ஆகியோர் இருக்கின்றனர். தொடர்ச்சியாக வெற்றிப்படங்களைக் கொடுத்துவரும் காத்திக் சுப்புராஜ் எப்படி ரஜினியை காட்டப்போகிறார்.. "பேட்ட" என்று பெயரிட்டிருப்பதால் நிச்சயம் பல அதிரடிக் காட்சிகள் இருக்கும் என்றெல்லாம் சொல்லப்படுகிறது.

இப்படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர். பொங்கல் என்றவுடனே தியேட்டர் எங்களுக்குத்தான் என அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் ரிசர்வ் செய்யபட்ட டேபிள் மேல் நேம் போர்டு வைத்ததுபோல் ஸ்ட்ராங்காக உள்ளது.

ஒரு "தல" என்றாலே ரசிகர்கள் தலை கால் புரியாமல் ஆடுவார்கள். இதில் அஜித் இரட்டை வேடத்தில் நடிப்பது தெரிந்த விஷயம். மேலும் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா என பல நல்ல விஷங்கள் இருப்பதால் போட்டியில் எது வெற்றிபெறும் என கணிக்க முடியவில்லை.

அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்துள்ள ரஜினி, மக்கள் மன்ற உறுப்பினர்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். ரசிகர்கள்தான் உறுப்பினர்களாக மாறுகிறார்கள் என்பதால், படம் ரிலீஸாகும்போது போஸ்டருக்கு பாலாபிஷேகம் செய்வது போன்ற வேலைகளில் ஈடுபடக்கூடாது, பட்டாசு வெடித்து கொண்டாடக்கூடாது என அறிவிக்கவும் வாய்ப்புள்ளது.

பொதுவாக அஜித் ரஜினி படங்களுக்கு ஓபனிங் நன்றாக இருக்கும். ஓபனிங் ரேசைத் தாண்டி எந்த படம் ஜெயிக்கிறது என்பதுதான் முக்கியம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X