பேட்ட, விஸ்வாசம் மோதல்: ரொம்ப சரியாச் சொன்னார் வெங்கட் பிரபு #Petta #Viswasam
சென்னை: பேட்ட, விஸ்வாசம் மோதல் குறித்து இயக்குனர் வெங்கட் பிரபு கூறியுள்ளது மிகச் சரி.
சமூக வலைதளங்களில் ரஜினி, அஜித் ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டது இல்லை. இந்நிலையில் பேட்ட, விஸ்வாசம் தொடர்பாக அவர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
முதலில் ரிலீஸ் தொடர்பாக ஏற்பட்ட மோதல் தற்போது வசூல் குறித்து தொடர்கிறது.

சன் பிக்சர்ஸ்
ரசிகர்கள் மோதிக் கொண்டிருக்கும் நேரத்தில் சன் பிக்சர்ஸ் ப்ரொமோ வீடியோ ஒன்றை வெளியிட பதிலுக்கு கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் ஒரு வீடியோவை வெளியிட மோதல் அடுத்தக் கட்டத்தை தொட்டது. இன்னும் மோதல் முடிவுக்கு வந்த பாடில்லை.
வெங்கட் பிரபு
ரஜினி, அஜித் ரசிகர்கள் மோதல் குறித்து இயக்குனர் வெங்கட் பிரபு ட்வீட்டியிருப்பதாவது, பேட்ட படத்துடன் விஸ்வாசம் மோதவில்லை. பேட்டயும், விஸ்வாசமும் சேர்ந்து வந்துள்ளன. இரண்டு பேரின் ரசிகர்களின் இந்த படங்களை தயவு செய்து கொண்டாடுங்கள். அன்பை பரப்பவும், வெறுப்பை அல்ல. ஒப்பீடுகளை பார்க்கும்போது வருத்தமாக உள்ளது. தமிழ் சினிமாவுக்கு இந்த ஆண்டு அமோகமாக துவங்கியுள்ளது. பேட்ட குழு, விஸ்வாசம் குழு மற்றும் ரசிகர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

விஸ்வாசம்
பேட்ட படத்துடன் விஸ்வாசம் மோதவில்லை. இரண்டு படங்களும் சேர்ந்து வருகின்றன என்று இயக்குனர் சிவா தெரிவித்திருந்தார். தற்போது வெங்கட் பிரபுவும் அதையே தான் கூறியுள்ளார்.
மோதல்
ரஜினி, அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தானாக மோதிக் கொள்ளவில்லை, தூண்டுதலின்பேரில் நடக்கிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது. ரஜினி ரசிகர்கள் அஜித்தை விமர்சிப்பதால் தான் தாங்களும் பதிலுக்கு ஏதாவது பேச வேண்டியுள்ளது என்கிறார்கள் தல ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











