சி.எஸ். அமுதன் சொல்வதை பார்த்தால் பேட்ட, விஸ்வாசம் வசூல் எல்லாம் ஜுஜுபியா?

By Siva

சென்னை: இயக்குனர் சி.எஸ். அமுதன் சொல்வதை பார்த்தால் பேட்ட, விஸ்வாசத்தை விட தமிழ் படம் 2 அதிகம் வசூல் செய்திருக்கும் போன்று.

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்த விஸ்வாசம் படம் ரிலீஸான 8 நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ. 125 கோடி வசூல் செய்தது என்று கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் அறிவிப்பு வெளியிட்டது.

சும்மா சொல்ல வேண்டும் என்பதற்காக ஒரு தொகையை தெரிவிக்கவில்லை என்றும் அது கூறியது.

வசூல்

'தமிழ் படம் 2' 8 நாட்களில் எவ்வளவு வசூல் செய்தது என்று ஒருவர் இயக்குனர் சி.எஸ். அமுதனிடம் கேட்டார். அதற்கு அவரோ, ஒவ்வொரு இருக்கையிலும் 2, 3 பேர் அமர்ந்திருந்தனர், மேலும் கூடுதல் நாற்காலிகள், மெத்தை எல்லாம் போடப்பட்டதால் வசூலை கணக்கிடுவது மிகவும் கடினம் என்று தனக்கே உரிய பாணியில் பதில் அளித்துள்ளார்.

பேட்ட

பேட்ட

பேட்ட, விஸ்வாசம் படங்கள் ரிலீஸாகியுள்ளன. அந்த படங்களின் காட்சிகள், வசூல் விவகாரம், ப்ரொமோ வீடியோ மோதல்கள் என்று சி.எஸ். அமுதனுக்கு ஏகப்பட்ட கான்செப்ட் கிடைத்துள்ளது. தமிழ் படம் 3ல் வச்சு செய்யப் போகிறார்.

தமிழ் படம் 3

தமிழ் படம் 3

தமிழ் படம் 3 எடுத்தால் அது அகில உலக சூப்பர் ஸ்டார் சிவாவை வைத்து தான் எடுப்பேன் என்று தெரிவித்துள்ளார் சி.எஸ். அமுதன். சும்மா ஒரு புகைப்படம் வெளியானாலே கான்செப்ட் பிடிப்பவர் பேட்ட, விஸ்வாசத்தை சும்மாவா விடுவார்?. இருக்கு தமிழ் படம் 3-ல் சிறப்பான தரமான சம்பவங்கள் இருக்கு.

அகில உலக சூப்பர் ஸ்டார்

அகில உலக சூப்பர் ஸ்டார்

சூப்பர் ஸ்டாரை வேண்டுமானால் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் அடக்கலாம் ஆனால் அகில உலக சூப்பர் ஸ்டாரை முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளனர் சிவா ரசிகர்கள். அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற கேள்வி அவ்வப்போது எழுகிறது ஆனால் அடுத்த அகில உலக சூப்பர் ஸ்டார் யார் என்ற கேள்விக்கே இடமில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X