மலேசிய பாக்ஸ் ஆபீஸில் பேட்ட, விஸ்வாசம் செய்த சாதனை
சென்னை: பேட்ட மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்கள் மலேசிய பாக்ஸ் ஆபீஸில் சக்கை போடு போடுகின்றன.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படமும், சிவா இயக்கத்தில் அஜித் நடித்த விஸ்வாசம் படமும் ஒரே நாளில் ரிலீஸாகி நல்ல வசூல் செய்து கொண்டிருக்கின்றன.
இரண்டு படங்களுமே 3 நாட்களில் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளன.

பேட்ட
மலேசிய பாக்ஸ் ஆபீஸில் பேட்ட படம் முதலிடத்திலும், விஸ்வாசம் இரண்டாவது இடத்திலும் உள்ளன. மலாய், ஹாலிவுட், சீன படங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளியுள்ளன.

விஸ்வாசம்
அமீரகத்தில் வெளியான இரண்டு நாட்களில் பேட்ட படம் ரூ. 4.51 கோடியும், விஸ்வாசம் ரூ. 3.12 கோடியும் வசூல் செய்துள்ளன. இங்கிலாந்தில் பேட்ட ரூ. 1.3 கோடியும், விஸ்வாசம் ரூ. 44 லட்சமும் வசூலித்துள்ளன.(2 நாள் வசூல்).

வசூல்
பேட்ட மற்றும் விஸ்வாசம் வெளியான இரண்டு நாட்களில் இந்திய பாக்ஸ் ஆபீஸில் ரூ. 35.50 கோடியும், ரூ. 33.50 கோடியும் வசூலித்துள்ளன. பொங்கல் பண்டிகை விடுமுறை முடியும் வரை இரண்டு படங்களுமே தங்களின் வசூல் வேட்டையை தொடரும் என்று நம்பப்படுகிறது.

ரஜினி
பேட்ட படம் இந்தியில் சரியாக ஓடவில்லை. படத்தில் ரஜினிக்கு டப்பிங் சரியாக செட் ஆகாததுடன், 2.0 அளவுக்கு விளம்பரம் செய்யப்படவில்லை. அதனால் சூப்பர் ஸ்டார் படம் என்றாலும் பேட்ட இந்தியில் ஜொலிக்க முடியவில்லை. அது ரஜினியின் தவறும் இல்லை.


Click it and Unblock the Notifications











