பேட்ட, விஸ்வாசம் தமிழக வசூல் மட்டும் எவ்வளவு தெரியுமா? #Petta #Viswasam
Recommended Video

சென்னை: விஸ்வாசம், பேட்ட படங்களின் தமிழக வசூல் நிலவரம் தெரிய வந்துள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படமும், சிவா இயக்கத்தில் அஜித் நடித்த விஸ்வாசம் படமும் பொங்கல் ஸ்பெஷலாக ஒரே நாளில் வெளியானது.
தமிழகத்தில் விஸ்வாசத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

பேட்ட
தமிழகத்தில் பேட்ட படத்தை விஸ்வாசம் முந்தியுள்ளது. பேட்ட படம் தெலுங்கு மற்றும் இந்தியிலும் வெளியிடப்பட்டது. இந்தியில் பேட்டயால் தரமான சம்பவம் செய்ய முடியாமல் போயுள்ளது. அங்கு சிம்பா, யூரி ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபீஸை ஆதிக்கம் செய்துள்ளன.

ரஜினி படம்
பேட்ட படம் ரிலீஸான 6 நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ. 69.68 கோடி வசூலித்துள்ளது. அதே 6 நாட்களில் விஸ்வாசம் தமிழகத்தில் ரூ. 92.30 கோடி வசூல் செய்துள்ளது. பேட்ட சென்னை பாக்ஸ் ஆபீஸில் 6 நாட்களில் ரூ. 6.34 கோடியும், விஸ்வாசம் ரூ. 5.51 கோடியும் வசூலித்துள்ளன.
மகிழ்ச்சி
விஸ்வாசம் படம் ஒரேயொரு மொழியில் வெளியாகி உலக அளவில் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளதை அஜித் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.

தல
மலேசியா கோல்டன் ஸ்க்ரீன்ஸ் சினிமாஸில் முதலிடத்தில் இருந்த பேட்டயை இரண்டாவது இடத்திற்கு தள்ளி முந்தியுள்ளது விஸ்வாசம் என்பது குறிப்பிடத்தக்கது. பிரான்ஸிலும் பேட்ட படத்தை முந்தியுள்ளது விஸ்வாசம்.


Click it and Unblock the Notifications











