twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜிஎஸ்டி... ஆன்லைன் வர்த்தகம்... மத்திய அரசின் கொள்கைகளை விமர்சிக்கும் 'பெட்டிக்கடை'!

    |

    சென்னை: சமுத்திரகனி நடித்துள்ள பெட்டிக்கடை திரைப்படம், மத்திய அரசின் கொள்கைகளை விமர்சிக்கும் வகையில் வெளிவந்துள்ளது.

    ஷ்மி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்துள்ள படம் பெட்டிக்கடை. அருள், சீனிவாஸ் என்ற இரட்டையர்கள் ஒளிப்பதிவு செய்ய , மரியா மனோகர் இசையமைத்துள்ளார்.

    Pettikadai: A movie against corporate companies

    சமுத்திரகனி , மொசக் குட்டி வீரா, சாந்தினி, சுந்தர் ,அஸ்மிதா , '96' வர்ஷா , நான் கடவுள் ராஜேந்திரன் , ஆர்.சுந்தர்ராஜன் , ஆர்.வி.உதயகுமார் , செந்தி ,திருமுருகன் , ராஜேந்திரநாத் , ஐஸ்வர்யா உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு எதிராக இப்படம் பேசுகிறது.

    Pettikadai: A movie against corporate companies

    திருநெல்வேலி அருகே உள்ள ஒரு கிராமத்தில் மருத்துவராக வேலைக்கு செல்கிறார் சாந்தினி. அந்த ஊரில் மருந்துக்கூட கடைகள் இல்லை. ஒரு பெட்டிக்கடை கூட இல்லை. பெட்டிக்கடைகள் எல்லாவற்றையும் ஒழித்து கட்டி விட்டு , ஒரு கார்ப்பரேட் நிறுவனம் டோர் டெலிவரி மூலம் அனைத்து பொருட்களையும் விற்கிறார்கள். இதற்கு எதிராக ஊர்காரர்களை ஒன்று திரட்டி போர்க்கொடி உயர்த்துகிறார் சாந்தினி. அதில் அவர் வெற்றி பெற்றாரா என்பதே படத்தின் கதை.

    சாந்தினி, வர்ஷா, அஸ்மிதா என மூன்று நாயகிகளும் கிளாமராக நடித்துள்ளனர். வழக்கம் போல் 10 நமிடம் கெஸ்ட் ரோலில் வந்து அட்வைஸ் மழை பொழிகிறார் சமுத்திரகனி. ஆன்லைன் வர்த்தகம், கார்ப்பரேட் கம்பெனிகளால் நம்மூர் பெட்டி கடைகள் காணாமல் போகும் என்பதை அழுத்தமாக பதிவு செய்கிறது இந்த பெட்டிக்கடை. அதேபோல் மத்திய அரசின் கொள்கைகளை விமர்சிக்கும் வகையில் பல கருத்துகள் படத்தில் இடம்பெற்றுள்ளன.

    English summary
    Actor Samuthirakani starring Pettikadai is a movie that speaks against central government's policies.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X