விஜய் இடத்தை நிரப்ப சூர்யா சேதுபதி சரியான ஆள்.. பீனிக்ஸ் படம் பார்த்த பின் இயக்குநர் விக்ரமன் பளீச்!

சென்னை: சண்டை பயிற்சி மாஸ்டர் அனல் அரசு இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள படம் பீனிக்ஸ். இந்த படம் நாளை அதாவது ஜூலை 4ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படம் நேற்று அதாவது ஜூலை 2ஆம் தேதி பத்திரிகையாளர்களுக்கும் திரைத்துறையினருக்கும் சிறப்புக் காட்சியாக திரையிடப்பட்டது. இந்நிலையில் படம் பார்த்த இயக்குநர் விக்ரமன் சூர்யா சேதுபதிய்இன் ஆக்‌ஷன் காட்சிகளுக்கான நடிப்பை பாராட்டியுள்ளார்.

படம் பார்த்துவிட்டு வந்த உடனே அவர் தெரிவித்ததாவது, " இந்த படம் சூர்யா சேதுபதிக்கு முதல் படம் போலவே தெரியவில்லை. 20,30 படங்கள் செய்ததைப் போல சிறப்பாக நடித்துள்ளார். குறிப்பாக ஆக்‌ஷன் காட்சிகளில் பிச்சு உதறிவிட்டார். படம் பார்க்கும்போது சூர்யா சேதுபதியை ட்ரோல் செய்தது எதுவும் மனதுக்கு வரவில்லை. சின்ன பையன், 19 வயசு தான் ஆகுது. இன்னும் மெச்சூரிட்டி இல்லை. சில வார்த்தைகள் தவறி பேசிவிட்டார். அந்த வயதில் நானுமே அப்படித்தான் இருந்தேன். அந்த வயதில் எல்லோருமே கூட தவறாக பேசி இருப்போம். அதே நேரத்தில் சூர்யா சேதுபதி தவறாக எதுவும் பேசவில்லை. பாக்கெட் மணியாக 500 கொடுத்தது போதவில்லை என்பது அவருக்கு குறையாக தெரிந்திருக்கலாம்.

Phoenix Celebrity Review Director Vikraman Appreciates Surya Sethupathi Replace Vijay
Photo Credit:

ஆனால் படம் பார்க்கும்போது சூர்யா சேதுபதி குறித்த ட்ரோல்கள் எதுவும் மனதில் தோன்றவில்லை. இந்த படத்தில் சூர்யா சேதுபதியை மாஸ்டர் அனல் அரசு சிறப்பாக பயன்படுத்தி உள்ளார். மிகவும் எக்ஸ்லண்ட்டாக படத்தில் நடிக்க வைத்துள்ளார். குறிப்பாக சண்டைக் காட்சிகளில் நன்றாக நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் கதாநாயகன்களுக்கு வெற்றிடம் உள்ளது. மிகவும் குறைவான நடிகர்களே உள்ளார்கள்.

ஆக்‌ஷன் கதாநாயகர்களின் வெற்றிடம்: விஜய் சினிமாவில் நடிக்க மாட்டேன் எனக் கூறிவிட்டார். அஜித் கார் ரேஸில் தான் அதிக கவனம் செலுத்துகிறார். விஷாலும் இடைவெளி எடுத்து எடுத்துதான் படங்களில் நடிக்கிறார். விஜயகாந்த் சார் இப்போது இல்லை. இதனால் தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் கதாநாயகர்களுக்கு ஏற்பட்ட இடைவெளியை நிறைவேற்ற சூர்யா சேதுபதி மிகவும் பொருத்தமான நடிகராக இருப்பார். இன்னும் சொல்லப்போனால் அந்த வெற்றிடத்தை சூர்யா சேதுபதி நிரப்பிவிட்டார். கமர்ஷியலாக ஒரு வெற்றிப் படமாக இது இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் விஜயகாந்த், விஜய், அஜித், விஷால் ஆகியோர் இல்லாத இடத்தை சூர்யா சேதுபதி நிரப்புவார் எனக் கூறியது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

Phoenix Celebrity Review Director Vikraman Appreciates Surya Sethupathi Replace Vijay
Photo Credit:

சரியான எமோஷன்: அதேபோல் இயக்குநர் மோகன் ராஜா கூறுகையில், " மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அதிகப்படியான ஆக்‌ஷன் காட்சிகளை உள்ளடக்கிய படமாக பீனிக்ஸ் உள்ளது. ஆக்‌ஷன் படம் என்றாலும் சரியான எமோஷன் இல்லை என்றால் நன்றாக இருக்காது. ஆனால் இந்த படத்தில் எமோஷனுக்கான காரணங்கள் மிகவும் கனெக்ட் ஆகிறது. இது மட்டுமல்லாமல், காட்சிக்கு காட்சி வித்தியாசமான சண்டைக் காட்சிகளாக இருப்பதும் நன்றாக உள்ளது. இருவருக்குமே இது முதல் படம் போலத் தெரியவில்லை. இந்த படத்திற்காக பெரிய உழைப்பு போட்டுள்ளார்கள். அது கட்டாயம் படத்திற்கு வெற்றியைப் பெற்றுத் தரும் எனத் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X