Phoenix X Review: ’பீனிக்ஸ் வீழான்’ ட்விட்டர் விமர்சனம்.. விஜய் சேதுபதி மகன் சூர்யா நடிப்பு எப்படி?

சென்னை: சண்டை இயக்குநர் அனல் அரசு இயக்கத்தில் 'பீனிக்ஸ் வீழான்' திரைப்படம் ஜூலை 4ம் தேதி வெளியாகிறது. நாளை தமிழ் சினிமாவில் இந்த வாரமும் பல சிறிய பட்ஜெட் படங்கள் லைன் கட்டி வெளியாகின்றன. ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடித்துள்ள 'பறந்து போ' திரைப்படம், ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் சரத்குமார், சித்தார்த் நடித்துள்ள 3பிஹெச்கே மற்றும் விஜய் சேதுபதி மகன் சூர்யா சேதுபதி நடித்துள்ள 'பீனிக்ஸ் வீழான்' உள்ளிட்ட படங்கள் வெளியாகின்றன.

கடந்த வாரம் தமிழ் சினிமாவில் வெளியான படங்களில் விஜய் ஆண்டனியின் மார்கன் படம் மட்டுமே தயாரிப்பாளர்களுக்கு லாபம் தந்த படமாக மாறியுள்ளது என்கின்றனர். இந்நிலையில், இந்த வாரம் வெளியாக காத்திருக்கும் படங்கள் எந்தளவுக்கு வெற்றியை பெறப் போகின்றன என்பது நாளை படம் வெளியான பின்னர் மக்கள் காட்டும் ஆதரவை பொறுத்து தான் கூறமுடியும்.

Phoenix Veezhan Twitter Review in Tamil Vijay Sethupathi son Suriya Sethupathi done a decent debut
Photo Credit:

மக்கள் செல்வன் மகன் சூர்யா சேதுபதி ஏற்கனவே சிந்துபாத் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும், ஹீரோவாக தமிழ் சினிமாவில் ஜூலை 4ம் தேதி அறிமுகமாக காத்திருக்கிறார். நேற்று சத்யம் சினிமாஸில் பிரத்யேக காட்சி வெளியான நிலையில், அதை பார்த்த பிரபலங்கள் ட்விட்டர் பக்கத்தில் சூர்யா சேதுபதியின் நடிப்பு குறித்தும் படம் குறித்தும் பதிவிட்டுள்ள விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..

பல தடைகளை கடந்து வெளியாகும் பீனிக்ஸ்: பெயருக்கு ஏற்றவாறே பீனிக்ஸ் பறவையை போல இந்த படமும் பல தடைகளை கடந்து ஒருவழியாக நாளை வெளியாகிறது. சூர்யாவின் கங்குவா படத்துக்குப் போட்டியாக பீனிக்ஸ் வீழான் படத்தை வெளியிடுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பல மாதங்கள் தாமதத்திற்கு பிறகு நாளை இந்த படம் வெளியாகிறது. இந்த படத்தில் சூர்யா சேதுபதி, வரலட்சுமி சரத்குமார், அபி நக்‌ஷத்ரா, தேவதர்ஷினி, சம்பத் ராஜ், அஜய் கோஷ், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

பேச்சை குறைத்து ஆக்‌ஷன்: முதல் பாதி முழுவதுமே சூர்யா சேதுபதிக்கு பெரிதாக வசனமே இல்லை. ஆனால், ஜெயில் சண்டை உள்ளிட்ட 3 சண்டைக் காட்சிகளை இயக்குநர் அனல் அரசு தரமாக இயக்கியிருக்கிறார். முதல் படத்திலேயே செம ஸ்ட்ராங்கான கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பில் சூர்யா சேதுபதி மிரட்டியிருப்பதாக கூறியுள்ளனர்.

சண்டை பிரியர்களுக்கு பிடிக்கும்: ரமேஷ் பாலா தனது ட்விட்டர் விமர்சனத்தில் 'பீனிக்ஸ் வீழான்' படத்துக்கு 5க்கு 3.25 ரேட்டிங் கொடுத்திருக்கிறார். முதல் பாதி முழுவதுமே சண்டைக் காட்சிகள் தான் என்றும் MMA மற்றும் சிறுவர் சீர்த்திருந்த பள்ளி காட்சிகள் தான் படத்தில் அதிகம். அனல் அரசு மாஸ்டரின் சண்டைக் காட்சிகள் படத்திற்கு பெரும் பலமாக உள்ளது. சூர்யா சேதுபதி ஹீரோவாக முதல் படத்திலேயே தடம் பதிக்கிறார் என விமர்சனம் கொடுத்துள்ளார்.

சூர்யா சேதுபதி சூப்பர்: ரத்தம் தெறிக்க தெறிக்க சண்டைக் காட்சிகளுடன் படத்தை பார்க்க விரும்புபவர்களுக்கான விருந்தை சூர்யா சேதுபதி தனது முதல் படத்திலேயே கொடுத்திருக்கிறார். அம்மாவாக நடித்துள்ள தேவதர்ஷினியின் நடிப்பு சிறப்பு. வில்லன்கள் எல்லாம் கேரிகேச்சர்கள் போல வந்து செல்வது தான் படத்திற்கு மைனஸ். சூர்யா சேதுபதி எடுத்துக் கொண்ட கதையில் முரட்டுப் பையனாக நடித்து மிரட்டியுள்ளார். மிக்ஸ்ட் மார்ஷியல் ஆர்ட்ஸ் காட்சிகளில் வேறலெவல் என ஸ்ரீதேவி ஸ்ரீதர் இந்த படத்துக்கு 3.25 ரேட்டிங் கொடுத்திருக்கிறார். நாளை படம் வெளியானதும் பொதுமக்கள் படத்தையும் மக்கள் செல்வன் மகனையும் எப்படி கொண்டாடுகிறார்களா? இல்லையா? என்பது தெரிந்துவிடும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X