பிரபல தயாரிப்பாளரை சந்தித்த அஜித்...எதற்கு இந்த திடீர் சந்திப்பு?...அப்டேட் லோடிங்கா?

சென்னை : சமீப காலமாக அஜித்தின் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு, வைரலாக்கப்படுவதை பார்க்க முடிகிறது. இந்த போட்டோக்களை ரசிகர்கள் தொடர்ந்து கொண்டாடியும் வருகின்றனர்.

மிக அரியதாகவே பொது இடங்களில் தோன்றும் அஜித் ஏர்போர்ட்டிற்கு சென்றாலும் சரி, ரைஃபில் கிளப்பிற்கு சென்றாலும் சரி அந்த போட்டோ லோ க்வாலிட்டியாக இருந்தாலும், பழைய போட்டோவாக இருந்தாலும் அது சோஷியல் மீடியாவில் பகிர்ந்து சில நிமிடங்களிலேயே டிரெண்டாகி விடுகிறது.

லேட்டஸ்ட் போட்டோக்கள் மட்டுமின்றி, அஜித்தின் பழைய பேச்சுக்கள், பேட்டிகள் போன்ற வீடியோக்களையும் அவ்வவ்போது பகிர்ந்து டிரெண்டாக்கி வருகிறார்கள் அவரின் தீவிர ரசிகர்கள்.

கேப்ல மெடல் வென்றவர்

கேப்ல மெடல் வென்றவர்

ஏகே 61 படத்தில் ஒரு பக்கம் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் கிடைத்த கேப்பில் 2 பைக் டூர் மற்றும் துப்பாக்கி சுடுதல் போட்டியிலும் பங்கேற்கு ஏராளமான பதக்கங்களையும் வென்று வந்து விட்டார் அஜித். இது தொடர்பான போட்டாடோக்கள் ஏராளமாக வெளியாகி இணையத்தில் தாறுமாறாக வைரலானது.

அடுத்த படமும் ரெடி

அடுத்த படமும் ரெடி

தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிக்கும் ஏகே 61 படத்தில் நடித்து வரும் அஜித், அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கும் ஏகே 62 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இந்த படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். இதற்கான ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகள் துவங்கி விட்டதாக சொல்லப்படுகிறது.

ஏகே 62 ஷுட்டிங் எப்போ

ஏகே 62 ஷுட்டிங் எப்போ

லேட்டஸ்ட் தகவலின் படி ஏகே 62 படத்தின் ஷுட்டிங் அடுத்த ஆண்டு துவக்கத்தில் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள், மற்ற கலைஞர்கள் உள்ளிட்ட விபரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

தயாரிப்பாளரை சந்தித்த அஜித்

தயாரிப்பாளரை சந்தித்த அஜித்

இந்த சமயத்தில் தற்போது லைகா ப்ரொடக்ஷன்ஸ் உரிமையாளர் சுபாஸ்கரன் அல்லிராஜாவை அஜித் சந்தித்து பேசி உள்ளார். இந்த போட்டோ தான் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. ஏகே 61 ஷுட்டிங் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைவதாக சொல்லப்படுகிறது. இந்த சமயத்தில் ஏகே 62 பட தயாரிப்பாளர்களை அஜித் சந்தித்துள்ளதால் விரைவில் அப்டேட் வர போகிறதா ? அல்லது ஏகே 62 வேலைகள் ஆரம்பமாகி விட்டது என்பதற்கான மறைமுக அறிவிப்பா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X