ஏரியில் மாயமாவதற்கு முன், குடும்பத்துக்கு நடிகை அனுப்பிய மகனின் போட்டோ.. மீட்புக் குழு தீவிரம்!

By

கலிபோர்னியா: மாயமாவதற்கு முன் பிரபல நடிகை அவரது குடும்பத்துக்கு அனுப்பிய போட்டோவை அடையாளமாக வைத்து மீட்புக் குழு அவரைத் தேடி வருகிறது.

பிரபல ஹாலிவுட் நடிகை நயா ரிவேரா. இவர் த மாஸ்டர் ஆப் டிஸ்கியூஸ், ஃபிரான்கன்ஹூட், க்ளீ, அட் த டெவில் டோர், மேட் ஃபேமிலிஸ் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

டிவி சீரியல்களிலும் நடித்துள்ள இவர் இசை ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளார்.

காதல் திருமணம்

காதல் திருமணம்

இவர், நடிகர் ரியான் டோர்சே என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஜோஸி ஹாலிஸ் என்ற மகன் உள்ளார். 2 வருடங்கள் கழித்து கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். பின்னர் விவாகரத்து பெற்றனர். லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்து வந்த நடிகை ரிவேரா, தனது 4 வயது மகனுடன் பிக்னிக் செல்ல முடிவெடுத்தார்.

திடீரென மாயமானார்

திடீரென மாயமானார்

இதையடுத்து கலிபோர்னியாவின் வென்சுராவில் உள்ள பிரு ஏரிக்கு கடந்த புதன்கிழமை சென்றார். அங்கு ஒரு படகை, நண்பகல் ஒரு மணிக்கு வாடகை அமர்த்தினார். அந்த படகு ஏரியில் சென்றுகொண்டிருந்தது. ஆனால், குறிப்பிட்ட நேரத்துக்குள் அந்தப் படகு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பரமாரிப்பாளர்கள் மற்றொரு படகில் சென்று பார்த்தனர். நடு ஏரியில் அந்தப் படகு இருந்தது. ஆனால், நடிகையை காணவில்லை. அதில் அவர் மகன் மட்டுமே இருந்துள்ளான்.

திரும்ப வரவில்லை

திரும்ப வரவில்லை

நயா ரிவேராவுக்கான லைஃப் ஜாக்கெட்டும் படகில் அப்படியே இருந்துள்ளது. அவர் மகன் படகில் தூங்கியபடி இருந்துள்ளான். அவன் உடலில் கவச உடை பொருத்தப்பட்டிருந்தது. போலீசார் அவனிடம் விசாரித்தபோது, 'அம்மா ஸ்விம்மிங் சென்றார், திரும்ப வரவில்லை' என்று கூறியுள்ளான். மாயமான நயா ரிவேராவை இத்தனை நாட்களாகியும் கண்டுபிடிக்க முடியாதது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கண்டுபிடிக்க முடியவில்லை

கண்டுபிடிக்க முடியவில்லை

அவரை தேடும்பணி தொடர்ந்து நடந்து வருகிறது. அவர் ஏரிக்குள் விழுந்து தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது தவறி விழுந்து உயிரிழந்து விட்டாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இதற்கிடையே ஏரியின் அருகே காரில் இறங்கி, தனது மகனுடன் நயா செல்வதும், படகில் மகன் மட்டும் இருப்பது போன்ற புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

மகனின் போட்டோ

மகனின் போட்டோ

ரியாவின் 4 வயது மகன் அவனது தந்தை ரியான் டோர்சேயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான். இதற்கிடையே தான் மாயமாவதற்கு முன் நடிகை நயா, தனது குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அங்கு எடுக்கப்பட்ட தனது மகனின் போட்டோவை அனுப்பியுள்ளார். அந்த போட்டோவின் பின்னணியில் உள்ள மலை வளைவு பகுதியை வைத்து அந்த இடத்தில், மீட்டுக் குழுவினர் தேடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X