Don't Miss!
- News
"சின்ன கேப்சூல் மாயம்.." அலறிய ஆஸ்திரேலியா.. கடைசியில் பெரிய ட்விஸ்ட்.. நிம்மதி! என்ன நடந்தது
- Technology
அடேங்கப்பா.. கூகுள் மேப்-க்கு மாற்றாக இத்தனை செயலிகள் இருக்குதா? வாங்க பார்ப்போம்.!
- Finance
பட்ஜெட்டில் வெளியான 5 முக்கிய வருமான வரி மாற்றங்கள்.. சம்பளதாரர்களுக்கு பயனளிக்குமா?
- Automobiles
எல்லாரும் வாங்க கூடிய விலையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! வர்ற 9ம் தேதி பெட்ரோல் வண்டிகளுக்கு எல்லாம் ஆப்பு!
- Lifestyle
தட்டுக்கடை முட்டை பிரியாணி செய்வது எப்படி தெரியுமா?
- Sports
ஆட்டத்தை மாற்றியது சுப்மன் கில் அல்ல.. சூர்யகுமாரின் அந்த செயல் தான்.. அதிர்ச்சி அடைந்த நியூசி வீரர்
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பாபா கவுண்டிங் ஸ்டார்ட்ஸ்… முதல் ஆளாக தரமான சம்பவம் செய்த ரஜினி… இது சீன்லயே இல்லையே!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்த மாதம் 12ம் தேதி தனது 72வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு 2002ம் ஆண்டு வெளியான பாபா திரைப்படம் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளது.
இந்நிலையில், பாபா திரைப்படத்தின் மறு வெளியீட்டுக்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு தரமான சம்பவம் செய்து மாஸ் காட்டியுள்ளார்.
இருட்டுக்குள்
இருந்து
ஒரு
வெடி
சிரிப்பு..அசத்திய
ரஜினிகாந்த்..நடிகர்
ஆனந்த்ராஜின்
நெகிழ்ச்சி
அனுபவம்

பிறந்தநாளில் பாபா ரீ-ரிலீஸ்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த டிசம்பர் 12ம் தேதி தனது 72வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அன்றைய தினம் அவர் நடித்து வரும் ஜெயிலர் படத்தில் இருந்து ஸ்பெஷலான அப்டேட் வரும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஆனால், அதே தினத்தில் சர்ப்ரைஸ் ட்ரீட்டாக ரஜினியின் பாபா திரைப்படம் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளது. 2002ம் ஆண்டு வெளியான பாபா படத்திற்கு ரஜினியே கதை, திரைக்கதை எழுதி அவரே தயாரித்து இருந்தார். அண்ணாமலை, வீரா, பாட்ஷா படங்களை தொடர்ந்து, சுரேஷ் கிருஷ்ணா பாபா படத்தை இயக்கினார்.

யாரும் எதிர்பார்க்காத அப்டேட்
ரஜினியுடன், மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, டெல்லி கணேஷ், கருணாஸ், உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏஆர் ரஹ்மான் பாபா படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்நிலையில், இந்தப் படம் ரீ-எடிட் செய்யப்பட்டு ரன்னிங் டைம் கொஞ்சம் குறைக்கப்பட்டுள்ளதாம். அதேபோல், ஏஆர் ரஹ்மான் இசையில் பாடல்கள் அனைத்தும் டால்பி சவுண்ட் சிஸ்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாம். மேலும், பலவிதங்களிலும் புது பொலிவுடன் பாபா படம் வெளியாகவுள்ளது. அதேநேரம் ரஜினியும் தன் பங்கிற்காக பாபா படத்தில் ஒரு புதிய பங்களிப்பை செய்துள்ளாராம்.

வெளியான புகைப்படங்கள்
பாபா படத்தில் பல புதுமைகள் இருக்கும் போது டப்பிங்கும் அப்படியே இருந்தால் நல்லா இருக்காது என ரஜினிகாந்த் முடிவு செய்துவிட்டாராம். அதனால், பாபா படத்திற்காக அவரே மீண்டும் டப்பிங் கொடுத்துள்ளார். ஸ்டூடியோவில் சோபாவில் அமர்ந்து ரஜினிகாந்த் டப்பிங் கொடுக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இப்போதும் அதே எனர்ஜியுடன் ரஜினி டப்பிங் கொடுப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், இந்தப் புகைப்படங்களில் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இது தான் மாஸ்
பாபா படத்தின் ரீ-ரிலீஸில் தனது குரலும் ஃப்ரெஷ்ஷாக இருக்க வேண்டும் என சூப்பர் ஸ்டார் எடுத்துள்ள இந்த முடிவை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். முன்னதாக "பாபா போன்ற ஒரு பேண்டசியான படத்தை 2கே கிட்ஸ்கள் பார்த்திருக்கவே மாட்டார்கள்" என்று சுரேஷ் கிருஷ்ணா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. மகா அவதார் பாபாஜியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட பாபா, 2002ம் ஆண்டு எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், ரஜினியின் பாபா முத்திரை ரொம்பவே பிரபலம் ஆனது. அதேபோல், வழக்கம் போல ரஜினியின் ஸ்டைலும் மாஸ் காட்டியது. இந்நிலையில் தற்போது பாபா திரைப்படம் புதுப்பொலிவுடன் மீண்டும் வெளியாக உள்ளது.