இளம் நடிகையை பாலியல் பலாத்காரம் செய்த யூடியூபர் கைது.. என்னென்ன கூத்தெல்லாம் நடந்துச்சோ?
ஹைதராபாத்: இணையமும் சமூக வலைதளங்களும் வளர்ந்த பின்னர் எங்கு தவறு நடந்தாலும் அது வெளிப்பட்டு விடுகின்றது. அதற்கான தைரியத்தையும் தளத்தையும் சமூக வலைதளங்கள் உருவாக்கிக் கொடுத்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள், சட்ட நடவடிக்கை எடுத்தாலும் எடுக்காவிட்டாலும், சமூக வலைதளங்களில் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் குறித்து பேசி மக்களையே தீர்ப்பு எழுத வைத்து விடுகின்றார்கள். அண்மையில் தமிழ்நாட்டில் கூட விஜய் டீவி தொகுப்பளினிகள் மணிமேகலை மற்றும் பிரியாங்கா தேஷ்பாண்டேவுக்கு இடையிலான பிரச்னையைக் கூறலாம்.
அதேபோல் ஆந்திராவில் ஒரு பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஆனால் அது இருவருக்கு இடையிலான ஈகோ பிரச்னை கிடையாது. அது, ஒரு பெண், தன்னை ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், தன்னை நிர்வாணமாக்கி புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து மிரட்டியதாகவும் புகார் அளித்துள்ளார். மேலும் அவர் தனது புகாரில் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகவும் தன்னைக் காதலிப்பதாகவும் கூறி பாலியல் பலாத்காரம் செய்தார் எனக் குறிப்ப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

அதாவது ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் நன்கு அறியப்பட்ட யூடூபர்களில் ஒருவராக இருப்பவர் யூடூபர் ஹர்ஷா சாய். இவர் தனதுக்கு சமூக வலைதளத்தில் கிடைத்த புகழைக் கொண்டு, சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார். தெலுங்கில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் மீது பிரபல நடிகை ஒருவர் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரில், " ஹர்ஷா சாய் தன்னைக் காதலிப்பதாகவும் தன்னைத் திருமணம் செய்துகொள்வதாகவும் கூறி, பாலியல் பலாத்காரம் செய்தார் என புகார் அளித்துள்ளார். மேலும் தனிமையில் இருந்தபோது நிர்வாணமாக எடுத்த புகைப்படங்களைக் காட்டி தன்னை மிரட்டி இதுவரை ரூபாய் 2 கோடிகள் வரை பணம் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் அபிப்ராயம்: சமூகவலைதளத்தின் மூலம் மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமான ஹர்ஷா சாய் மீது இப்படியான புகார் முதலில் எழுந்தபோது பலருக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் புகாருக்குப் பின்னர் ஹர்ஷா சாய் தலைமறைவு ஆன பின்னர் பலரும் ஹர்ஷா சாய் தவறு செய்துள்ளார், அதனால்தான் அவர் ஓடு ஒளிகின்றார். இல்லையென்றால் அவர் இதனை உடனே எதிர்கொண்டிருப்பார் எனக் கூறுகின்றனர்.

தலைமறைவு: மேலும் ஹர்ஷா சாய் மீது குற்றம் சாட்டியுள்ளவர், தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக உள்ளார். இப்படியான நிலையில் ஹர்ஷா சாய் குறித்து இவர் அளித்துள்ள புகார் பலரையும் திடுக்கிடச் செய்கின்றது. இந்நிலையில் நடிகை அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து, காவல்துறை ஹர்ஷா சாயை தேடி வருகின்றனர். ஹர்ஷா சாய் மட்டும் இல்லாமல் அவரது குடும்பத்தினரே தங்களது மொபைலை ஸ்விட்ச் ஆஃப் செய்து விட்டு தலைமறைவாகியுள்ளனர். ஹர்ஷா சாய் தரப்பில் இருந்து ஒரேயொரு வீடியோ மட்டும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. அதில், தன் மீது பொய்புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இனிமேல் எனது வழக்கறிஞர் விரிவாக மக்களுக்கு நடந்ததைக் கூறுவார் என தெரிவித்த நிலையில் அவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர் என ஆந்திரா ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











