மஞ்சுமெல் பாய்ஸ் இயக்குநர் மீது பாலியல் புகார்.. வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அநாகரீக செயலா?
எர்ணாகுளம்: மலையாள திரைப்பட இயக்குநர் சிதம்பரம், இவர் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் இயக்குநர். மலையாள திரையுலகில் மிகவும் திறமையான இயக்குநர்களில் ஒருவராக அவர் கருதப்படுகிறார். இப்படி இருக்கையில் இவர் மீது பெண் ஒருவர் கேரளம் மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள தெற்கு காவல் நிலையத்தில், தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்தார் என்று புகார் அளித்துள்ளார். குறிப்பாக இயக்குநர் சிதம்பரம் தனது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து இவ்வாறு நடந்து கொண்டார் என்று தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார். இவரது இந்த புகார் குறித்த தகவல்கள் தற்போது மொத்த மலையாள திரையுலத்தினர் மத்தியில் பேசு பொருளாக மாறி உள்ளது.

மஞ்சுமெல் பாய்ஸ் படம் வெளியான கால கட்டத்தில் இவர் மீது நிதி மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இது இப்போது வரை விசாரணையில் உள்ளது. அரவிந்த் என்பவர் கேரள நீதிமன்றத்தில் அளித்த மனுவின் அடிப்படையில் இயக்குநர் சிதம்பரத்தத்தின் மீதும், மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் தயாரிப்பு நிறுவனமான பறவா ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் ரூபாய் 7 கோடி ரூபாய் பண மோசடி நடைபெற்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இப்படி இருக்கையில் இயக்குநர் சிதம்பரத்தின் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் கொடுக்கப்பட்டிருப்பதால் இது குறித்த பேச்சு பரவலாக பேசப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











