உடல் வலிமையா மன வலிமையா? தாமரையின் அசர வைக்கும் நெஞ்சுரம்

பிக்பாஸ் வீட்டுக்குள் அனைவராலும் அலட்சியமாக பார்க்கப்பட்ட தாமரை தனது நெஞ்சுரத்தால் வலிமையான ஆண் போட்டியாளர்களையும் பின்னுக்கு தள்ளி முன்னேறி வருவது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. போட்டிக்கு தேவை உடல்பலம் அல்ல மன பலமே என்பதை தாமரை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார்.

பிக்பாஸ் சீசன் 5 பல விஷயங்களை நமக்கு சொல்லித்தருகிறது. சீசன் 5 போட்டியாளர்களில் ஒருசிலர் தவிர பெரும்பாலானோர் அறிமுகம் இல்லாத அல்லது பிரபலமில்லாதவர்களே. இமான் அண்ணாச்சி, பிரியங்கா, சின்னப்பொண்ணு, சஞ்சீவி, பாவனி உள்ளிட்ட சிலரே ரசிகர்களுக்கு அறிமுகமானவர்கள்.

கிராமத்திலிருந்து வந்த ஒன்றுமறியாத தாமரை

கிராமத்திலிருந்து வந்த ஒன்றுமறியாத தாமரை

இதில் வெள்ளந்தியாக வந்தவர் தாமரை எனும் நாடகக்கலைஞர். எந்த அளவுக்கு வெள்ளந்தியானவர் என்றால் சோறு சாப்பிட்டதில்லை, ஏசி ரூம் என்றால் என்னவென்றே தெரியாது, நான் இன்னும் சில வாரங்கள் இங்கேயே இருந்தால் நலமாக இருக்கும் என்று பேசிய அளவுக்கு வெள்ளந்தியானவர் தாமரை.

கன்னிவெடி தாமரை

கன்னிவெடி தாமரை

ஆரம்பத்தில் சாதாரணமான கிராமத்து பின்னணி கொண்டவர் தானே என போலி நாகரீக ஹை சொசைட்டிகள் தாமரையை அணுக பல விஷயங்கள் பிடிபடவில்லை என தெரிவித்தவர் பின்னர் காட்டிய வேகம் இருக்கிறதே அப்பப்பா? பிரியங்காவின் வாய்க்கு 6 அடி 4 அங்குல உயரமிருக்கும் நிரூப் பயப்படும்போது துணிந்து தப்புன்னா தப்புதான் என்று முகத்துக்கு நேரே அடித்துச் சொல்லி டாப் ரேங்கில் இருக்கிறார். அண்ணாச்சி பாணியில் சொல்ல வேண்டும் என்றால் அம்மாடி இது கன்னிவெடி என்று சொல்லலாம்.

போட்டிகளில் தோற்காத மன உறுதி

போட்டிகளில் தோற்காத மன உறுதி

தாமரை தனது வாதத்தால் மற்றவர்களை வெல்வது மட்டுமல்ல, எதிர்க்கருத்தை வைக்கும்போது மற்றவர்கள் அஞ்சும் பிரியங்கா, பாவனிக்கு எதிராகவும் துணிந்து பேசியதை காணமுடிந்தது. அது மட்டுமல்லாமல் நாமினேஷனிலிருந்து தப்பிக்க நடந்த போட்டியில் ராஜு போன்றோர் முதலிலேயே ஓடிவிட, பிரியங்கா போன்றோர் பீட்சாவுக்கு ஆசைப்பட்டு விலக உறுதியாக நின்றார் தாமரை.

16 மணி நேரம் மாறா மன உறுதி தலைவியான தாமரை

16 மணி நேரம் மாறா மன உறுதி தலைவியான தாமரை

தொடர்ந்து அப்போட்டிகள் அனைத்திலும் வென்றார். இதனால் நாமினேஷனிலிருந்து தப்பித்தார். அதன் பின்னர் நேற்று நடந்த தலைவருக்கான போட்டியில் கயிற்றைப்பிடித்து விடாமல் இருக்கும் போட்டியில் பெண் போட்டியாளர்களான பிரியங்கா, பாவனி, அக்‌ஷ்ரா போன்றோர் விலகிவிட கடைசி வரை உறுதியாக நின்றார் தாமரை. பிரியங்காவின் விடாத பேச்சில் உணர்ச்சி வசப்பட்டு விலகினார் நிரூப். ஆனால் அமீரும், தாமரையும் விலகவில்லை.

Recommended Video

Bigg Boss Tamil Season 5 | 21st December 2021 - Promo 3 | அம்மாவை நினைத்து கதறி அழுத Amir
விலகிய அமீர் உறுதியாக நின்ற தாமரை

விலகிய அமீர் உறுதியாக நின்ற தாமரை

அதன் பின்னர் பல மணி நேரம் கடந்தும் தாமரை விலகாமல் அமீரிடம் பேச்சுக்கொடுத்து அவரை விலக வைத்தார். இத்தனைக்கும் தாமரை ஏற்கெனவே தலைவராக இருந்துள்ளார். அமீர் தலைவராக இருந்ததில்லை. ஆனாலும் உறுதியாக பேசி அமீரை வாபஸ் வாங்க வைத்தார். இது தாமரையின் மன உறுதிக்கு எடுத்துக்காட்டு.

ஆண்களுக்கு நிகராக நின்ற தாமரையின் உறுதிக்கு காரணம் அவரது மன உறுதியே. உடல் வலிமை உள்ள பலரும் விலகினர், காரணம் மன உறுதியின்மையே. நாடகத்துக்காக பல மணி நேரம் தூங்காமல் களத்தில் நின்ற தாமரைக்கு அந்தப்பயிற்சி உதவியுள்ளது. இதன் மூலம் மன உறுதிக்கும் உடல் வலிமைக்கும் சம்பந்தமில்லை என்கிற பாடம் பிக்பாஸ் நேயர்களுக்கு கிடைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X