அடுத்த ஷாக்.. மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகை.. கொரோனாவுக்கு சகோதரரை பறிகொடுத்த சோகம்

சென்னை: கோ, கோவா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகை பியா பாஜ்பாயின் சகோதரர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார்.

கோ பட இயக்குநர் கே.வி. ஆனந்த் கொரோனா பாதிப்பு காரணமாக சமீபத்தில் உயிரிழந்ததை அறிந்த நடிகை பியா பாஜ்பாய், இது பொய்யாக இருக்கக் கூடாதா என மனமுடைந்து ட்வீட் செய்திருந்தார்.

இந்நிலையில், தனது சகோதரரையே கொரோனா வைரஸுக்கு பறிகொடுத்துள்ளார் நடிகை பியா பாஜ்பாய்.

பலியாகும் உயிர்கள்

பலியாகும் உயிர்கள்

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கொரொனாவின் தாக்கம் நாடு முழுவதும் மிகப்பெரிய பாதிப்புகளை மக்களிடையே உருவாக்கி வருகிறது. நாள்தோறும் சுமார் 4 லட்சம் பேர் கொரோனாவால் பாதித்து வரும் நிலையில், ஆயிரக் கணக்கான மக்கள் தினமும் கொரோனாவால் பலியாகி வரும் கொடுமை அரங்கேறி வருகிறது.

பெட், ஆக்சிஜன் இல்லை

பெட், ஆக்சிஜன் இல்லை

டெல்லி, மகாராஷ்ட்ரா, உத்திரபிரதேசம் போன்ற வட மாநிலங்களில் படுக்கை வசதிகளும், ஆக்சிஜன் பற்றாக்குறையும் பல பேரின் உயிரை காவு வாங்கி வருகிறது. தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர்.

சுடுகாடு ஹவுஸ்ஃபுல்

சுடுகாடு ஹவுஸ்ஃபுல்

இன்னொரு பக்கம் கொரோனா நோயாளிகளை எரிக்கும் சுடுகாடுகளும் ஹவுஸ்ஃபுல் போர்ட் போடும் அளவுக்கு நிரம்பி வழியும் அவல நிலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஆண்டை போல இல்லாமல், இந்த முறை கொரோனா குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் என பலரையும் விடாமல் தாக்கி வருகிறது.

பியா பாஜ்பாய் சகோதரர் பலி

பியா பாஜ்பாய் சகோதரர் பலி

கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு இருந்த நடிகை பியா பாஜ்பாயின் சகோதரரும் கொரோனாவால் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. "எனது சகோதரர் உயிருடன் இல்லை" என்றும் நடிகை பியா பாஜ்பாய் தனது ட்விட்டர் பக்கத்தில் மனமுடைந்து ட்வீட் போட்டுள்ளார்.

வெண்டிலேட்டருடன் படுக்கை வேண்டும்

வெண்டிலேட்டருடன் படுக்கை வேண்டும்

தனது சகோதரர் உயிருக்கு போராடி வருவதாகவும், உத்திர பிரதேசத்தில் உள்ள ஃபருக்தாபாத்தில் உள்ள கயாம்கன்ஜ் பிளாக்கில் வெண்டிலேட்டருடன் கூடிய படுக்கை வசதி வேண்டுமென்று காலை முதலே பல பிரபலங்களுக்கும் கோரிக்கை வைத்து வந்தார் நடிகை பியா பாஜ்பாய், இந்நிலையில், அவரது சகோதரர் உரிய மருத்துவ வசதி கிடைக்காமல் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கே.வி. ஆனந்த் மரணம்

கே.வி. ஆனந்த் மரணம்

கோ, கோவா, ஏகன், சரோஜா உள்ளிட்ட பல தமிழ்ப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பியா பாஜ்பாய். சில இந்தி படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் கொரோனாவுக்கு இயக்குநர் கே.வி. ஆனந்த் உயிரிழந்த செய்தியை அறிந்த நடிகை பியா பாஜ்பாய், இது பொய்யான செய்தியாக இருக்கக் கூடாதா என மனமுடைந்து ட்வீட் செய்திருந்தார். இந்நிலையில், அவரது வீட்டிலேயே கொரோனாவால் இப்படியொரு சோகம் நிகழ்ந்துள்ளது. நடிகை பியா பாஜ்பாயிக்கு திரைத்துறையினரும் அவரது ரசிகர்களும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X