ரஜினி, லதா பெயரை இடக்கையில் பச்சைக் குத்திய சௌந்தர்யா
சென்னை: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் - லதா தம்பதியினரின் இளைய மகளான சவுந்தர்யா, தனது அப்பா, அம்மா பெயரை தனது கையில் டாட்டூவாகக் குத்தியுள்ளார்.
நம் பாட்டிமார் காலத்தில் பச்சை என அழைக்கப்பட்டது தான் இன்று டாட்டூ என்ற பெயரில் புதிய பேஷனாக உலா வந்து கொண்டிருக்கிறது. பறவைகள், விலங்குகள் மற்றும் பூக்கள் என டாட்டூக்கள் குத்தியது போய், சமீபகாலமாக தங்களது மனதுக்கு பிடித்தவர்களின் பெயரை டாட்டூவாக குத்துவது பேஷனாக உள்ளது.
அந்தவகையில் தற்போது தமிழ் சினிமாவில் கிராபிக்ஸ் வடிவமைப்பாளர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் எனப் பன்முகத் திறமையாளராக வலம் வரும் ரஜினியின் இளைய மகளான சவுந்தர்யா, 'லதா ரஜினி' என தனது கையில் டாட்டூ குத்தியுள்ளார்.

அறிமுகம்
தமிழ் சினிமாவில் கிராபிக்ஸ் வடிவமைப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கிய சௌந்தர்யா, பின்னர் ரஜினிகாந்த் நடித்த படங்களில் தலைப்புகளை வடிவமைக்கத் தொடங்கினார்.

கோச்சடையான்...
கோவா திரைப்படத்தின் மூலம் திரைப்பட தயாரிப்பாளராக ஆன சவுந்தர்யா, ரஜினி - தீபிகா படுகோனே நடிப்பில் தயாரான கோச்சடையான் படம் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகியுள்ளார்.

மோஷன் கேப்சர்....
கோச்சடையான் படத்தில் இவர் அறிமுகப் படுத்திய மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்திற்கு சர்வ தேச அளவில் பாராட்டு கிடைத்தது.

நீங்காத பாசம்...
இந்நிலையில், தந்தை ரஜினிகாந்த், தாய் லதா ஆகியோரின் மீது நீங்காத பாசத்தைக் கொண்ட சவுந்தர்யா, அதனை வெளிப்படுத்தும் விதமாக தனது கையில் லதா ரஜினி என்று டாட்டூ குத்தியுள்ளார்.
டுவிட்டரில்...
இதனை புகைப்படமாக எடுத்து தனது டுவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார் சவுந்தர்யா.


Click it and Unblock the Notifications











