விஜய் ஆண்டனியின் பிறந்தநாள் பரிசு.. வெளியானது பிச்சைக்காரன் 2 ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!
சென்னை: விஜய் ஆண்டனியின் பிறந்தநாளை முன்னிட்டு பிச்சைக்காரன் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி இருக்கிறது.
சினிமா வாழ்க்கையில் அவருக்கு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த படம் பிச்சைக்காரன். தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம் 'பிச்சைக்காரன் 2' என்ற டைட்டிலில் வெளியாவது உறுதியாகி விட்டது.
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை நடிகர் விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இசை டு ஹீரோ
சின்ன பாப்பா பெரிய பாப்பா தொலைக்காட்சி தொடரில் ஆரம்பித்த விஜய் ஆண்டனியின் திரை வாழ்க்கை, தளபதி விஜய் நடித்த சுக்ரன் படத்தில் இசையமைப்பாளராக லிஃப்ட் ஆனது. நாக்க மூக்கா பாடலுக்காக, Cannes Golden Lion விருதை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை விஜய் ஆண்டனி பெற்றார். பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்த விஜய் ஆண்டனி, நான் படம் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார். இன்று தனது 45வது பிறந்தநாளை விஜய் ஆண்டனி கொண்டாடி வருகிறார்.

பிளாக்பஸ்டர் வெற்றி
நான், சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், சைத்தான், எமன், காளி, அண்ணாதுரை, கொலைகாரன் என பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ள விஜய் ஆண்டனிக்கு, இயக்குநர் சசி இயக்கத்தில் 2016ம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியையும் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்டையும் கொடுத்தது.

பிறந்தநாள் பரிசு
இந்நிலையில், தனது 45வது பிறந்தநாளை முன்னிட்டு, தனது அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் விஜய் ஆண்டன். விஜய் ஆண்டனியின் பிறந்தநாள் பரிசாக பிச்சைக்காரன் 2 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி வைரலாகி வருகிறது. அவரது ரசிகர்கள் அதனை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

தேசிய விருது வென்ற இயக்குநர்
பிச்சைக்காரன் படத்தை இயக்குநர் சசி இயக்கி இருந்த நிலையில், பிச்சைக்காரன் 2 படத்தை இயக்குநர் பிரியா கிருஷ்ணசாமி இயக்கவுள்ளார். இவர், தேசிய விருது வென்ற பாரம் படத்தை இயக்கிவர். தலைக்கூத்தல் முறைப்படி வயதான பெற்றோர்களை குடும்ப பாரம் தாங்காமல் பிள்ளைகளே கொலை செய்யும் முறையை படமாக எடுத்து அதிரவைத்து இருந்தார்.

எப்போ ரிலீஸ்
லாக்டவுன் காரணமாக இந்த ஆண்டு வெளிவர வேண்டிய பல படங்களே அடுத்த ஆண்டு தான் வெளியாகும் நிலை உருவாகி இருக்கிறது. இந்நிலையில், பிச்சைக்காரன் 2 படத்தின் ரிலீஸ் 2021 என படக்குழு அறிவித்து இருக்கிறது. விஜய் ஆண்டனி தயாரிப்பில் உருவாகவுள்ள இந்த படத்திற்கு தேனி ஈஷ்வர் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.


Click it and Unblock the Notifications











