Pichaikkaran2 Collection : விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2..முதல் நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா?
சென்னை : விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் முதல்நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் ஆண்டனி நடித்து, எழுதி, இயக்கி, எடிட் செய்து, இசையமைத்திருக்கும் திரைப்படம் பிச்சைக்காரன் 2
காவ்யா தாப்பர், தேவ் கில், ஹரீஷ் பேரடி, ஜான் விஜய் உள்ளிட்டோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பிச்சைக்காரன் 2 : பணக்காரரான விஜய் குருமூர்த்தி (விஜய் ஆண்டனி). அவரது நெருங்கிய நண்பராக நடித்திருக்கிறார் அரவிந்த் (தேவ் கில்). இவர் தனது நண்பர் விஜய் ஆண்டனியின் சொத்தை அபகரிக்க திட்டம் தீட்டுகிறார். இதற்காக விஜய் ஆண்டனியின் உடலில் வேறொருவரின் மூளையை பொருத்தி அதன் மூலம் சொத்தை அபகரிக்க திட்டமிடுகிறார்.
வித்தியாசமான கதை : இந்த சதித் திட்டத்தில் வந்து மாட்டிக்கொள்கிறான் பிச்சைக்காரன் சத்யா. திட்டமிட்டப்படி சத்யாவின் மூளை, விஜய் ஆண்டனியின் உடலுடன் பொருத்தப்பட்டதா,சதித் திட்டம் பலித்ததா? இதுதான் 'பிச்சைக்காரன்- 2' படத்தின் கதை. மூளை மாற்று சிகிச்சை என்ற இன்ட்ரஸ்டிங் ஐடியா இதை அழகாக திரையில் கொடுத்து இயக்குநராக ஜெயித்துவிட்டார் விஜய் ஆண்டனி,
நல்ல நடிப்பு : விஜய் ஆண்டனியின் அறிமுகப்படமான நான் படம் தொடங்கி தனது வழக்கமான ட்ரேட் மார்க் நடிப்பை கைவிடாமல் இப்படத்திலும் தொடர்ந்துள்ளார். கடைசியில் வரும் எமோஷனல் காட்சிகளில் நடிப்பில் அழுத்தம் கூட்டியிருக்கிறார் விஜய் ஆண்டனி. குறைந்த காட்சிகள் வந்தாலும் காவ்யா தாப்பர் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார். தேவ் கில், ஜான் விஜய், ஹரீஷ் பேரடி, யோகிபாபு, மன்சூர் அலிகான் கதாபாத்திரம் என ஒவ்வொருவரும் தனது கதாபாத்திரம் உணர்ந்து நடித்துள்ளனர்.

முதல் நாள் வசூல் : இத்திரைப்படம் நேற்று திரையரங்கில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது. 20 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம் தமிழ்நாட்டில் 3 கோடியே 80 லட்சமும், கேரளாவில் 15 லட்சமும், கர்நாடகாவில 60 லட்சமும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 4 கோடியே 50 கோடியும், நார்த் இந்தியாவில் 10 லட்சமும், இந்தியாவில் மட்டும் 9 கோடியே 15 லட்சத்தை வசூலித்துள்ளது. உலகம் முழுவதும் பிச்சைக்காரன் 2 திரைப்படம் 9 கோடியே 65 லட்சத்தை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வசூல் அதிகரிக்கும் : ஒரு நடிகராக தனது முந்தைய படங்களில் பாக்ஸ் ஆபிஸில் தனது திறமையை ஏற்கனவே நிரூபித்த விஜய் ஆண்டனி தான் இயக்குனராக அறிமுகமான பிச்சைக்காரன் 2 மூலம் தனது வெற்றிகரமான பயணத்தைத் தொடருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால், வசூல் கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











