Pichaikkaran 2 :பிச்சைக்காரன் 2 படம் இதுவரை எவ்வளவு கலெக்ஷன் செஞ்சிருக்கு தெரியுமா.. பாக்கலாங்களா!

சென்னை : நடிகர் விஜய் ஆண்டனி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் ரிலீசானது பிச்சைக்காரன் 2.

விஜய் ஆண்டனியின் இயக்கம் மற்றும் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் பிச்சைக்காரன் படம் வெளியாகி தற்போது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இந்தப் படத்தில் பாடல்கள் மற்றும் ஸ்கிரீன் ப்ளே உள்ளிட்டவையும் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்தது. இந்தப் படத்தின் ரிலீசுக்கு முன்னதாக விஜய் ஆண்டனி பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Pichaikkaran 2 movie box office collections crosses 35 crore rupees in just 11 days

11 நாட்களில் பிச்சைக்காரன் 2 படம் செய்த வசூல் சாதனை : நடிகர் விஜய் ஆண்டனி இசையமைப்பாளராக தன்னுடைய கேரியரை துவங்கி தற்போது, நடிகர், தயாரிப்பாளர் என அடுத்தடுத்த களங்களில் தன்னை வெளிப்படுத்தி வருகிறார். அவரது அடுத்தடுத்த படங்கள் நடிகராகவும் தயாராப்பாளராகவும் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்த நிலையில் தற்போது இயக்குநராக புதிய அவதாரமும் எடுத்துள்ளார். அவரது கேரியரில் பெஸ்ட்டாக அமைந்த பிச்சைக்காரன் படத்தின் இரண்டாவது பாகத்தை தற்போது அவர் இயக்கியுள்ளார்.

பிச்சைக்காரன் 2 படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரிலீசான நிலையில், ரசிகர்களை கவர்ந்து சிறப்பாக திரையரங்குகளில் ஓடி வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கில் இந்தப் படம் ஒரே நேரத்தில் வெளியானது. படத்தில் காவ்யா என்பவர் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாகியிருந்தார். கடந்த 19ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான நிலையில், கடந்த 11 நாட்களில் படம் சிறப்பான வசூலை பெற்றுள்ளது.

படத்தின் சூட்டிங்கின்போது விஜய் ஆண்டனி பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தார். மலேசியாவில் நடைபெற்ற சூட்டிங்கின்போது அவருக்கு பெரிய அளவிலான விபத்து ஏற்பட்டு, முகத்தில் அதிகமான காயங்கள் ஏற்பட்டன. இதையடுத்து படத்தின் கதை குறித்து, நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்தப் பிரச்சினைகளில் இருந்து மீண்டு, படம் சிறிது தாமதமாகவே ரிலீசானது. ஒய்ஜி மகேந்திரன், யோகி பாபு, மன்சூர் அலிகான், ஜான் விஜய் மற்றும் ராதாரவி போன்றவர்களும் இந்தப் படத்தில் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

Pichaikkaran 2 movie box office collections crosses 35 crore rupees in just 11 days

இயக்குநர் சசி இயக்கத்தில் கடந்த 2016ம் ஆண்டில் வெளியானது பிச்சைக்காரன் படம். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் விஜய் ஆண்டனிக்கு மிகப்பெரிய மார்க்கெட்டை இந்தப் படம் ஏற்படுத்தியிருந்தது. அம்மா சென்டிமெண்டை மையமாக கொண்டிருந்தாலும் வித்தியாசமான திரைக்கதையால் ரசிகர்களை இந்தப் படம் கவர்ந்தது. இந்நிலையில், இந்தப் படததின் இரண்டாவது பாகத்தையும் சசியே இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் மற்ற படங்களில் கமிட்டாகியிருந்ததால், விஜய் ஆண்டனியே இந்தப் படத்தை இயக்கினார்.

இதனிடையே, இந்தப் படம் கடந்த 11 நாட்களில் சர்வதேச அளவில் 35 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் வெளியாகியுள்ளது. முதல் நாளில் மட்டுமே இந்தப் படம் 6 கோடி ரூபாய்களுக்கும் மேலாக வசூலித்திருந்தது. பொன்னியின் செல்வன் 2 உள்ளிட்ட படங்களுக்கு இடையில் இந்தப் படமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வசூல் சாதனையும் புரிந்துள்ளது. இனிவரும் நாட்களில் இந்தப் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X