Pichaikkaran 2 - பிச்சைக்காரன் 2 ரிலீஸ் ஒத்திவைப்பு.. எப்போது தெரியுமா?

சென்னை: Pichaikkaran 2 Release (பிச்சைக்காரன் 2 ரிலீஸ்) விஜய் ஆண்டனி நடித்து இயக்கியிருக்கும் பிச்சைக்காரன் 2 படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.

எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் விஜய் சிறப்புத் தோற்றத்தில் நடித்த சுக்ரன் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. அந்தப் படத்தில் அவர் பாடல்களுக்கு மட்டும் இசையமைத்திருந்தார்.

முன்னணி இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி

முன்னணி இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி

இதனையடுத்து ஜீவா நடித்த டிஷ்யூம் படத்திற்கு இசையமைத்ததன் மூலம் அடையாளப்பட்டார் விஜய் ஆண்டனி. இருப்பினும் அவரை முன்னணி இசையமைப்பாளர் வரிசையில் அமர வைத்தது காதலில் விழுந்தேன் திரைப்படம். குறிப்பாக அந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த 'நாக்க முக்க' பாடல் பட்டித்தொட்டியெங்கும் ஒலித்தது. அந்தப் பாடலின் ஹிட்டுக்கு பிறகு முன்னணி இசையமைப்பாளராக மாறிய விஜய் ஆண்டனி விஜய் நடித்த வேட்டைக்காரன், வேலாயுதம் உள்ளிட்ட படங்களுக்கும் இசையமைத்தார்.

இசையமைப்பாளரிலிருந்து ஹீரோ அவதாரம்

இசையமைப்பாளரிலிருந்து ஹீரோ அவதாரம்

இந்தச் சூழலில் விஜய் ஆண்டனி 'நான்' படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படத்திலேயே கனகச்சிதமான நடிப்பை வழங்கிய விஜய் ஆண்டனிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அமைந்தன. அப்படி அவர் நடித்த 'சலீம்' படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து பல படங்களில் நடித்தாலும் பூ பட இயக்குநர் சசி இயக்கத்தில் அவர் நடித்த பிச்சைக்காரன் படம் பலத்த வரவேற்பைப் பெற்றது. அந்தப் படத்தின் கதையும், அவரது நடிப்பும் படத்தை பெரும் ஹிட்டாக்கின.

இயக்குநரான விஜய் ஆண்டனி

இயக்குநரான விஜய் ஆண்டனி

பிச்சைக்காரன் கொடுத்த வெற்றியை அடுத்து அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிடப்பட்டது. இந்தப் படத்தையும் சசி இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் விஜய் ஆண்டனியே இந்தப் படத்தை இயக்குவார் என அறிவிக்கப்பட்டது். எனவே இசையமைப்பாளர், ஹீரோ, தயாரிப்பாளர் என இருந்த விஜய் ஆண்டனி இயக்குநராகவும் இப்படத்தின் மூலம் அவதாரம் எடுத்தார். இந்தப் படத்தின் ஷூட்டிங் உள்நாடு, வெளிநாடு என விறுவிறுப்பாக நடந்து வந்தது.

ட்ரெண்டான பிகிலி

ட்ரெண்டான பிகிலி

இந்தப் படத்தின் ஸ்னீக் பீக் வெளியாகி வரவேற்பைப் பெற்ற சூழலில் கடந்த மாதம் பிகிலி பாடல் வீடியோ வெளியானது. ஏழைகளை ஏமாற்றி பணத்திமிரில் ஆடுபவர்களை இனி பிகிலி என்று அழைக்கலாம் என்று விஜய் ஆண்டனி பேசி தொடங்கும் அந்தப் பாடல் இணையத்தில் படு ட்ரெண்டானது. இதனையடுத்து படமானது ஏப்ரல் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ரிலீஸில் நேர்ந்த மாற்றம்

ரிலீஸில் நேர்ந்த மாற்றம்

இந்நிலையில் பிச்சைக்காரன் 2 படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதன்படி ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸாகவிருந்த பிச்சைக்காரன் 2வானது மே 19ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் அவர் நடித்திருக்கும் மற்றொரு படமான தமிழரசன் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளையராஜா இசையமைப்பில் தமிழரசன்

இளையராஜா இசையமைப்பில் தமிழரசன்

தமிழரசன் படத்தை பாபு யோகேஸ்வரன் இயக்கியிருக்கிறார். இப்படத்தில் ரம்யா நம்பீசன், சுரேஷ் கோபி, சோனு சூட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் 2020ல் ரிலீஸாக இருந்தது. ஆனால் கரோனா காரணமாக தள்ளிப்போனது. அதனையடுத்து 2022 நவம்பரில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X