Pichaikkaran 2: திரையரங்குகளில் வெற்றிகரமான 25வது நாள்... ஓடிடி ரிலீஸுக்கு ரெடியான பிச்சைக்காரன் 2
சென்னை: இசையமைப்பாளராக திரையுலகில் அறிமுகமான விஜய் ஆண்டனி, தற்போது ஹீரோவாகவும் கலக்கி வருகிறார்.
அவரே இயக்கி நடித்த பிச்சைக்காரன் 2 திரைப்படம் கடந்த மாதம் 19ம் தேதி வெளியானது.
கலவையான விமர்சனங்கள் கிடைத்த பிச்சைக்காரன் 2 படம் 35 கோடி ரூபாய் வரை வசூலித்தது.
திரையரங்குகளில் 25 நாட்கள் வெற்றிகரமாக ஓடிய இந்தப் படம் இப்போது ஓடிடி ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது.

ஓடிடியில் வெளியாகும் பிச்சைக்காரன் 2:விஜய் நடித்த சுக்ரன் திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. டிஷ்யூம், காதலில் விழுந்தேன், நினைத்தாலே இனிக்கும், வேட்டைக்காரன், உத்தமபுத்திரன், வேலாயுதம் உட்பட ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஒருகட்டத்தில் பட தயாரிப்பில் ஈடுபட்ட விஜய் ஆண்டனி பின்னர் அவரே ஹீரோவாகவும் நடிக்கத் தொடங்கினார்.
நான், சலீம் படங்கள் அடுத்தடுத்து ஹிட்டானதால், விஜய் ஆண்டனியும் கோலிவுட்டின் முன்னணி நாயகர்களில் ஒருவரானார். 2015ம் ஆண்டு விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்த பிச்சைக்காரன் திரைப்படம் மெஹா ஹிட் அடித்தது. சசி இயக்கத்தில் தமிழ் தெலுங்கு மொழிகளில் வெளியான இந்தப் படம் விஜய் ஆண்டனிக்கு மிகப்பெரிய கம்பேக் கொடுத்தது. அம்மா செண்டிமென்ட் தான் இப்படம் வெற்றிபெற முக்கியமான காரணமாக அமைந்தது.
இதனால், இப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் என விஜய் ஆண்டனி அறிவித்திருந்தார். அதன்படி, அவரே இயக்கி ஹீரோவாக நடித்த பிச்சைக்காரன் 2, கடந்த மாதம் 19ம் தேதி ரிலீஸானது. முன்னதாக Anti Bikili என்ற கேப்ஷன் கொடுத்து பிச்சைக்காரன் 2 படத்துக்கு ப்ரொமோஷன் செய்தார். ஏற்கனவே பிச்சைக்காரன் முதல் பாகம் ஹிட் ஆனதால், இரண்டாம் பாகத்துக்கும் அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது.

இதனையடுத்து கடந்த மாதம் 19ம் தேதி ரிலீஸான பிச்சைக்காரன் 2 படத்துக்கு ரசிகர்களிடம் கலவையான விமர்சனம் கிடைத்தது. மேலும், பாக்ஸ் ஆபிஸில் 35 முதல் 40 கோடி ரூபாய் வரை வசூலித்தது. இந்நிலையில், இந்தப் படம் திரையரங்குகளில் 25 நாட்களை கடந்துவிட்டதாக இரு தினங்களுக்கு முன்னர் படக்குழு அறிவித்திருந்தது. இதனால் பிச்சைக்காரன் 2 அடுத்த மாதம் தான் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், வரும் (ஜூன்) 18ம் தேதி பிச்சைக்காரன் 2 ஓடிடியில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் பிச்சைக்காரன் 2 வெளியாகவுள்ளது. இந்தப் படம் ஓடிடி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வரும் வள்ளி மயில் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











