பிச்சைக்காரன் 2 முதல் மார்டன் லவ் சென்னை வரை... இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் படங்கள்

சென்னை: கோடை விடுமுறையை முன்னிட்டு திரையரங்குகளிலும் ஓடிடி தளங்களிலும் அடுத்தடுத்து படங்கள் வெளியாகி வருகின்றன.

பொன்னியின் செல்வன் 2ம் பாகம் வெளியான பிறகு, கடந்த வாரம் தமிழில் 4 படங்கள் வெளியாகின.

அதனைத் தொடர்ந்து இந்த வாரமும் விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி ஆகியோரின் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன.

அதேபோல், ஓடிடியிலும் திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள் வெளியாகின்றன. அதன் பட்டியலை தற்போது பார்க்கலாம்.

 Pichaikkaran 2 to Modern Love Chennai here is the list of theatre and OTT releases this week

இந்த வாரம் தியேட்டர் ரிலீஸ்:தமிழில் இந்த வாரம் இரண்டு திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகின்றன. இதில், விஜய் ஆண்டனி நடித்து அவரே இயக்கியுள்ள பிச்சைக்காரன் 2 அதிக எதிர்பார்ப்பில் உள்ளது. சசி இயக்கிய இந்தப் படத்தின் முதல் பாகம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. அதேபோல், பிச்சைக்காரன் 2ம் பாகமும் சூப்பர் ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிச்சைக்காரனை 2வைத் தொடர்ந்து விஜய் சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளீர் படமும் இந்த வாரம் 19ம் தேதி ரிலீஸாகிறது. வெங்கட கிருஷ்ணா ரோக்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாகவும் அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷும் நடித்துள்ளனர். மேலும் கனிகா, விவேக், மகிழ் திருமேனி, மோகன் ராஜா ஆகியோர் முக்கியமான பாத்திரங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த யாதும் ஊரே யாவரும் கேளீர் இந்த வாரம் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், ஹாலிவுட் ரசிகர்களுக்காக FAST X திரைப்படம் இந்த வாரம் வெளியாகிறது. வின் டீசல், ஜஸ்டின் லின், ஜேசன் மோமோ, அலன் ரிச்சசன் உட்பட பல ஹாலிவுட் பிரபலங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஃபாஸ்ட் அன்ட் பியூரியஸ் படங்களின் சீரிஸ் வரிசையில் FAST X படமும் உருவாகியுள்ளதால், ஹாலிவுட் ரசிகர்களுக்கு தரமான ஆக்சன் ட்ரீட் கன்ஃபார்ம் என சினிமா விமர்சகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்த வாரம் ஓடிடி ரிலீஸ்: அதேபோல், ஓடிடி தளங்களிலும் இந்த வாரம் ஏராளமான படங்களும் வெப் சீரிஸ்களும் வெளியாகின்றன. அதில் முக்கியமாக தமிழில் ஆந்தாலஜி தொடராக உருவாகியுள்ள 'மாடர்ன் லவ் சென்னை' நாளை முதல் (மே 18) அமேசான் ப்ரைம் தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. பாரதிராஜா, தியாகராஜன் குமாரராஜா, ராஜுமுருகன் உள்பட 6 இயக்குநர்கள் இந்த தொடரை இயக்கியுள்ளனர். இளையராஜா, யுவன், ஜிவி பிரகாஷ், ஷான் ரோல்டன் ஆகியோர் இந்த தொடருக்கு இசையமைத்துள்ளனர்.

 Pichaikkaran 2 to Modern Love Chennai here is the list of theatre and OTT releases this week

மேலும், மஹத், சந்தோஷ் பிரதாப், வரலட்சுமி சரத்குமார், ஆரவ் நடித்துள்ள மாருதிநகர் போலீஸ் ஸ்டேஷன் திரைப்படம் வரும் 19ம் தேதி நேரடியாக ஆஹா ஓடிடியில் ரிலீஸாகிறது. க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்தை தயாள் பத்மநாபன் என்பவர் இயக்கியுள்ளார். இதுதவிர விமலின் தெய்வமச்சான் திரைப்படம் சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. மலையாளத்தில் பூக்களம் படம் டிஸ்னி பிளஸ் தளத்திலும், அயல்வாசி படம் நெட்பிளிக்ஸ் தளத்திலும், மஞ்சு வாரியர் நடித்துள்ள சென்டிமீட்டர் டென்ட்கொட்டா ஓடிடியிலும் வெளியாகிறது.

தெலுங்கில் விருபாக்ஷா திரைப்படம் நெட்பிளிக்ஸிலும் ஏஜெண்ட் படம் சோனி லிவ் ஓடிடியிலும் வெளியாகிறது. அதேபோல், ஹாலிவுட் ரசிகர்களுக்கு மிஸ்ஸிங், தி சன், மியூட்டட் வெப் சீரிஸ் ஆகியவை நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. இதுதவிர இன்னும் சில படங்களும் வெப் சீரிஸ்களும் வெளியாவதால் ஓடிடி ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X