மகள் ஆராத்யாவுடன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு கிளம்பிய ஐஸ்வர்யா ராய்
மும்பை: ஐஸ்வர்யா ராய் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள தனது மகள் ஆராத்யா மற்றும் தாய் விருந்தா ராயுடன் பிரான்ஸ் கிளம்பினார்.
பிரான்ஸில் உள்ள கேன்ஸ் நகரில் கேன்ஸ் திரைப்பட விழா நேற்று முன்தினம் துவங்கி நடந்து கொண்டிருக்கிறது. இதில் பாலிவுட் நட்சத்திரங்களான அமிதாப் பச்சன், வித்யா பாலன், சோனம் கபூர், மல்லிகா ஷெராவத் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த விழாவில் கலந்து கொள்ள ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது மகள் ஆராத்யா மற்றும் தாய் விருந்தா ராயுடன் பிரான்ஸ் கிளம்பினார்.

மகளுடன் ஐஸ்
மகள் மற்றும் அம்மாவுடன் ஐஸ்வர்யா பிரான்ஸ் கிளம்பிய போது எடுத்த படம்.

ஐஸ்வர்யா
கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு ஐஸ்வர்யா சற்றும் மெலிந்து காணப்படுகிறார்.

சிறப்பு விருந்தினர் ஐஸ்
வரும் ஞாயிற்றுக்கிழமை இந்திய சினிமாவின் 100 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விழாவில் ஐஸ்வர்யா தான் சிறப்பு விருந்தினர்.

சிவப்பு கம்பளம்
வரும் திங்கட்கிழமை ஐஸ்வர்யா கேன்ஸ் திரைப்பட விழாவில் சிவப்புக் கம்பளத்தில் நடக்கவிருக்கிறார்.

குண்டு ஐஸ்
கடந்த ஆண்டு நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட ஐஸ்வர்யாவின் உடல் பருமனைப் பற்றி தான் மீடியாக்கள் அதிகம் செய்தி வெளியிட்டன.

கவுனில் ஐஸ்
கடந்த 11 ஆண்டுகளாக கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு வரும் ஐஸ் 12வது முறையாக இந்த ஆண்டு கலந்து கொள்கிறார். கடந்த ஆண்டு அவர் சிவப்புக் கம்பளத்தில் நடக்கும் போது கவுன் அணிந்திருந்தார்.

இந்த ஆண்டு சேலை
இந்த ஆண்டு ஐஸ்வர்யா சேலை அணிந்து சிவப்புக் கம்பளத்தில் நடக்கவிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











