திருவிழா போன்று நடந்த சல்மான் கான் தங்கையின் திருமணம்: யார், யாரெல்லாம் வந்தாக?
ஹைதராபாத்: நடிகர் சல்மான் கானின் தங்கை அர்பிதாவின் திருமணத்திற்கு பாலிவுட் பிரபலங்கள் பலர் வந்திருந்தனர்.
நடிகர் சல்மானின் கானின் தங்கை அர்பிதா கான் தனது நீண்ட நாள் காதலரான டெல்லியைச் சேர்ந்த தொழில் அதிபர் ஆயுஷ் சர்மாவை செவ்வாய்க்கிழமை திருமணம் செய்து கொண்டார். ஹைதராபாத்தில் உள்ள பாலக்நுமா பேலஸில் பிரமாண்டமாக நடந்த திருமண விழாவில் பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.
திருமணத்திற்கு யார், யார் வந்தார்கள் என்று பார்ப்போம்.

பிரியங்கா சோப்ரா
சல்மான் கானுடன் ஜோடி சேர்ந்த நடிகை பிரியங்கா சோப்ரா நீல நிற புடவையில் அழகாக வந்திருந்தார்.

வருண் தவான்
இளம் நடிகர் வருண் தவான் சல்மான் அழைப்பை ஏற்று திருமணத்திற்கு வந்திருந்தார்.

ஆமீர் கான்
சல்மான் கானின் நல்ல நண்பரான ஆமீர் கான் பாரம்பரிய உடை அணிந்து வந்திருந்தார்.

கத்ரீனா கைப்
சல்மான் கானின் முன்னாள் காதலியான கத்ரீனா கைஃப் திருமணத்திற்கு வந்திருந்தார். ஆனால் அவரது காதலர் ரன்பீர் கபூர் மற்றும் அவரது பெற்றோரை சல்மான் அழைக்கவில்லை.

மலாய்க்கா
சல்மான் தம்பி அர்பாஸ் கானின் மனைவியும், நடிகையுமான மலாய்க்கா அரோரா கலக்கலாக இருந்தார்.

மிகா சிங்
பிரபல பாடகர் மிகா சிங் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடினார்.

கபீர் கான்
சல்மான் கான் நடித்து வரும் பஜ்ரங்கி பாய்ஜான் படத்தின் இயக்குனர் கபீர் கானை திருமண நிகழ்ச்சியில் காண முடிந்தது.

கரண் ஜோஹார்
பாலிவுட்டின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கரண் ஜோஹார் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அம்ரிதா அரோரா
மலாய்க்கா அரோராவின் தங்கையும் அர்பிதாவுக்கு நெருக்கமானவருமான அம்ரிதா அரோரா திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.

சல்மான் கான்
திருமணத்தில் ஓடியாடி வேலை பார்த்த சல்மான் கான் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார்.


Click it and Unblock the Notifications











