twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிசிஎல் 3: புஸ்ஸா போன சென்னை, கோப்பையை வென்ற கர்நாடகா புல்டோசர்ஸ்

    By Siva
    |

    பெங்களூர்: சிசிஎல் 3வது சீசனின் இறுதிப் போட்டியில் தெலுங்கு வாரியர்ஸ் அணியை வீழ்த்தி கர்நாடகா புல்டோசர்ஸ் அணி கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.

    சிசிஎல் எனப்படும் திரை நட்சத்திரங்களின் கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது சீசனில் விஷால் தலைமையிலான சென்னை ரைனோஸ் அணி வெளியேறியது. இந்நிலையில் கர்நாடகா புல்டோசர்ஸ் அணியும், தெலுங்கு வாரியர்ஸ் அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.

    இறுதிப் போட்டி பெங்களூரில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இதில் கர்நாடக அணி தெலுங்கு வாரியர்ஸ் அணியை 26 ரன்கள் வித்தியாசத்தில் வென்று கோப்பையைக் கைப்பற்றியது. டாஸ் வென்ற கர்நாடகா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    வெங்கடேஷிடம் ஆசி வாங்கும் சுதீப்

    வெங்கடேஷிடம் ஆசி வாங்கும் சுதீப்

    கர்நாடகா அணி கேப்டன் சுதீப் தெலுங்கு வாரியர்ஸ் அணியின் கேப்டன் வெங்கடேஷிடம் ஆசி வாங்குகிறார்.

    தோல்வி தான் வெற்றியின் படிக்கட்டு

    தோல்வி தான் வெற்றியின் படிக்கட்டு

    தங்கள் அணி தோற்றாலும் வெங்கடேஷ் அதை சீரியஸாக எடுத்துக் கொண்டு முறைக்காமல் சிரித்துப் பேசுகிறார்.

    அம்பரீஷுடன் சுதீப்

    அம்பரீஷுடன் சுதீப்

    தெலுங்கு அணி விக்கெட்டை இழக்காமல் இருந்தால் நிச்சயம் வெற்றி பெறும் என்று பேசப்பட்ட நிலையில் கர்நாடக அணி வென்றது.

    ஆட்டத்தை ஆர்வமுடன் பார்க்கும் அம்பரீஷ்

    ஆட்டத்தை ஆர்வமுடன் பார்க்கும் அம்பரீஷ்

    போட்டி பெங்களூரில் நடந்தது என்பதால் அரங்கில் கூடிய மக்கள் கர்நாடக அணிக்கு அதிகம் சப்போர்ட் செய்தனர். அதுவும் அணிக்கு ஒரு பூஸ்ட்டாக இருந்தது.

    கணவர் ரித்தேஷுடன் ஜெனிலியா

    கணவர் ரித்தேஷுடன் ஜெனிலியா

    போட்டியின் துவக்கத்தில் இரண்டு அணி வீரர்களும் கோப்பை நமக்குத் தான் என்ற நம்பிக்கையுடன் காணப்பட்டனர்.

    ஆட்டத்தை கவனிக்கும் ஜெனிலியா

    ஆட்டத்தை கவனிக்கும் ஜெனிலியா

    முதல் 10 ஓவர்களில் தெலுங்கு அணி ரன் எடுப்பதை விட விக்கெட்டை காப்பாற்றிக் கொள்வதிலேயே குறியாக இருந்தது.

    ரன் தான் முக்கியம்

    ரன் தான் முக்கியம்

    கர்நாடக அணி ரன் எடுப்பதில் அதிக கவனம் செலுத்தியது.

    ரன் குவித்த பிரதீப்

    ரன் குவித்த பிரதீப்

    கர்நாடக அணியின் துவக்க ஆட்டக்காரரான பிரதீப் 31 பந்துகளில் 45 ரன்கள் குவித்தார்.

    மோகன்லால்

    மோகன்லால்

    இறுதிப் போட்டியைக் காண லால் ஏட்டனும் வந்தார்.

    தெலுங்கு வாரியர்ஸ்

    தெலுங்கு வாரியர்ஸ்

    முதல் 5 ஓவர்களில் தெலுங்கு வாரியர்ஸ் விக்கெட்டுகளை இழந்து கர்நாடக அணி எடுத்திருந்த ரன்களையே எடுத்தது. ஆனால் அதற்கு பிறகு சமாளிக்க முடியவில்லை.

    சார்மி

    சார்மி

    ஒன்னும் சரியில்லை என்பது போன்று உள்ளது சார்மியின் முகபாவனை.

    சிரீயஸாக மேட்ச் பார்க்கிறோம்ல...

    சிரீயஸாக மேட்ச் பார்க்கிறோம்ல...

    அம்பரீஷ் ரொம்பவும் சீரியஸாக மேட்ச் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

    வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் வழங்கும் அம்பரீஷ்

    வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் வழங்கும் அம்பரீஷ்

    வெற்றி பெற்ற கர்நாடக அணி வீரர்களுக்கு பதக்கம் வழங்கினார் அம்பரீஷ்.

    ஜெயிச்சுட்டோம்ல...

    ஜெயிச்சுட்டோம்ல...

    வெற்றிக் களிப்பில் கேப்டன் சுதீப்.

    பிபாஷாவுடன் வெங்கடேஷ்

    பிபாஷாவுடன் வெங்கடேஷ்

    ரன்னரான தெலுங்கு வாரியர்ஸ் அணியின் கேப்டன் வெங்கடேஷுக்கு கோப்பையை வழங்கும் பிபாஷா பாசு.

    மகிழ்ச்சியில் கர்நாடக அணி வீரர்

    மகிழ்ச்சியில் கர்நாடக அணி வீரர்

    அப்பாடி இந்த வருஷம் ஜெயிச்சுட்டோம்.

    அரங்கில் சல்மான் தம்பி

    அரங்கில் சல்மான் தம்பி

    சல்மான் கானின் தம்பி சொஹைல் கான் இறுதிப் போட்டியைக் காண வந்திருந்தார்.

    இறுதிப் போட்டியில் பிரபலங்கள்

    இறுதிப் போட்டியில் பிரபலங்கள்

    அம்பரீஷ், அவரது மனைவி சுமலதா, பிபாஷா பாசு உள்ளிட்டோர் போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளனர்.

    கலக்கிட்டீங்க போங்க

    கலக்கிட்டீங்க போங்க

    ஒரு வகையாக 3வது சீசனில் ஜெயிச்சிட்டீங்க போல.

    ஹே... ஜெயிச்சிட்டோம்

    ஹே... ஜெயிச்சிட்டோம்

    போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் கர்நாடக அணி.

    அடுத்தவாட்டி பாத்துக்கலாம்

    அடுத்தவாட்டி பாத்துக்கலாம்

    இந்த முறை ரன்னர், அடுத்த முறை வின்னராக்கும்.

    வெற்றி நாயகன் சுதீப்

    வெற்றி நாயகன் சுதீப்

    கோப்பையை முத்தமிடும் சுதீப்.

    அணி கொடியுடன் கர்நாடகா புல்டோசர்ஸ்

    அணி கொடியுடன் கர்நாடகா புல்டோசர்ஸ்

    முதல் 2 சீசன்களில் கர்நாடக அணியை இறுதிப் போட்டிகளில் வென்று கோப்பையை தொடர்ந்து வென்ற சென்னை அணி இந்த முறை துவக்கத்திலேயே வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Karnataka Bulldozers, which had lost in finals in the last two seasons of Celebrity Cricket League, has broken the jinx, as the team convincingly beat Telugu Warriors at Chinnaswamy Stadium, Bangalore, on Sunday (March 10). The Sandalwood team won the match by 26 runs.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X