பதிவு திருமணம் செய்து கொண்டார் நடிகை ரீமா கல்லிங்கல்
திருவனந்தபுரம்: நடிகை ரீமா கல்லிங்கல் தனது காதலர் ஆஷிக் அபுவை திருமணம் செய்து கொண்டார்.
நடிகை ரீமா கல்லிங்கல் மலையாள இயக்குனர் ஆஷிக் அபுவை காதலித்தார். இதையடுத்து இரு வீட்டாரின் சம்மதத்தோடு அவர்களின் திருமணம் கடந்த 1ம் தேதி கேரள மாநிலத்தில் உள்ள காக்கநாடு பதிவாளர் அலுவலகத்தில் எளிமையாக நடந்தது.
ரீமா மற்றும் ஆஷிக்கின் சகோதரர்கள் சாட்சி கையெழுத்திட்டனர்.

விருந்து
ரீமாவும், அபுவும் பதிவுத் திருமணத்திற்கு பிறகு தங்களின் நலம் விரும்பிகளுக்காக விருந்து அளித்தனர். அந்த விருந்தில் மலையாள திரையுலகினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மாலை மாற்றல்
பதிவாளர் அலுவலகத்தில் கையெழுத்திட்ட பிறகு தம்பதிகள் மாலை மாற்றிக் கொண்டனர்.

இனிப்பு
தனது காதல் மனைவிக்கு இனிப்பு ஊட்டிவிடும் ஆஷிக் அபு.

மகிழ்ச்சி
திருமணம் முடிந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் ரீமா கல்லிங்கல். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











