டபூ ரத்னானியின் 2013 பாலிவுட் காலண்டர் படங்கள்

By Siva

மும்பை: புகழ்பெற்ற புகைப்படக்காரரான டபூ ரத்னானி பாலிவுட் நட்சத்திரங்களின் புகைப்படங்களை வைத்து 2013ம் ஆண்டுக்கான காலண்டரை வெளியிட்டுள்ளார்.

வித்தியாசமான கோணங்களில் அழகாக புகைப்படம் எடுப்பவர் என்று பெயர் எடுத்தவர் பிரபல புகைப்படக்காரர் டபூ ரத்னானி. அவர் கடந்த 1999ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் புகைப்பட காலண்டரை வெளியிட்டு வருகிறார். மக்கள் மத்தியில் அவர் காலண்டர் மிகவும் பிரபலம். தற்போதெல்லாம் அந்த காலண்டரில் பாலிவுட் நட்சத்திரங்களின் புகைப்படங்கள் தான் உள்ளன.

ரத்னானியின் காலண்டர் படத்துக்காக போஸ் கொடுக்க பாலிவுட் நட்சத்திரங்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் 2013ம் ஆண்டுக்கான காலண்டரை அவர் வெளியிட்டுள்ளார். அதில் அமிதாப் பச்சன், ஷாருக்கான், ரித்திக் ரோஷன், ஐஸ்வர்யா ராய், கஜோல், அசின் உள்ளிட்ட 24 நட்சத்திரங்களின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

2013 பாலிவுட் காலண்டர் படங்களைப் பாருங்களேன்.

ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா ராய்

குப்புறப் படுத்திருக்கும் ஐஸ்வர்யா ராயைப் பார்த்தால் ஒரு குழந்தைக்கு தாய் போன்று தெரியவில்லை.

சல்மான் கான்

சல்மான் கான்

வசூல் மன்னன் சல்மான் தனது ராசியான பிரேஸ்லெட்டுடன் விரைப்பாக போஸ் கொடுத்துள்ளார்.

கத்ரீனா கைப்

கத்ரீனா கைப்

கவர்ச்சிக்கு பெயர்போன கத்ரீனா கைப் நகை எதுவும் இன்றி ஏதோ ஒட்டுப்போட்ட டிரஸ் போட்டிருந்தாலும் கூட அழகாகத் தான் உள்ளார்.

ஜான் ஆபிரகாம்

ஜான் ஆபிரகாம்

பாவம் யாரு பெத்த பிள்ளையோ இப்படி ஆயிடுச்சு என்று சொல்லும்படி இருக்கு ஜான் ஆபிரகாமின் ரியாக்ஷன்கள்.

கரீனா கபூர்

கரீனா கபூர்

பாலிவுட்டின் முன்னணி நாயகி கரீனா நழுவும் ஸ்டாரைப்பை பிடிக்கிறாரோ.

ரன்பிர் கபூர்

ரன்பிர் கபூர்

ரன்பிர் கபூர் இருட்டில் கூலிங் கிளாஸ் போட்டுள்ளார்.

சோனாக்ஷி சின்ஹா

சோனாக்ஷி சின்ஹா

ஒரு பெரிய நாயைக் கட்டிப்பிடித்து உட்கார்ந்திருக்கும் சோனாக்ஷி என்ன ஆடை அணிந்திருக்கிறார் என்று தான் தெரியவில்லை.

வருண் தவான்

வருண் தவான்

அண்மையில் அறிமுகமான வருண் தவான் தனது சிக்ஸ் பேக் தெரியும்படி போஸ் கொடுத்துள்ளார்.

பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா சின்னப் பிள்ளையில் வாங்கிய டிரஸ்ஸைப் போட்டுக் கொண்டு வானைப் பார்க்கிறார்.

அக்ஷய் குமார்

அக்ஷய் குமார்

அக்கி அண்ணே சுருட்டு புடிக்காதீங்கண்ணே என்று குருவி சொல்கிறது.

வித்யா பாலன்

வித்யா பாலன்

வாயில் சிகரெட்டுடன் இருக்கும் வித்யா பாலனைப் பார்க்கையில் புகைபிடித்தால் தான் தப்பு சும்மா வாயில் வச்சா தப்பில்லை என்று விஜய் ஒரு படத்தில் சொல்லியது நினைவுக்கு வருகிறது.

அபிஷேக் பச்சன்

அபிஷேக் பச்சன்

அபிஷேக் பச்சன் கூலிங் கிளாஸ் அணிந்து ஏதோ உயரமான இடத்தில் உட்கார்ந்து எதையோ முறைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

ஆலியா பட்

ஆலியா பட்

கரண் ஜோஹார் அறிமுகப்படுத்திய ஆலியா கண்ணை மறைக்கும் முடியை ஒதுக்கிவிடாமல் குத்தவைத்து உட்கார்ந்துள்ளார்.

அஜய் தேவ்கன்

அஜய் தேவ்கன்

அஜய் தேவ்கன் கோபத்தில் இருக்கிறார் போல. யாரையோ முறைத்துப் பார்க்கிறார்.

அனுஷ்கா ஷர்மா

அனுஷ்கா ஷர்மா

பாவம் அவசரத்தில் பேண்ட் போட மறந்துவிட்டு போட்டோஷூட்டுக்கு வந்துவிட்டார் போலும்.

அமிதாப் பச்சன்

அமிதாப் பச்சன்

அமிதாப் ஜி இது என்னை இப்பூடி கிளமம்பிட்டீங்க.

அசின்

அசின்

அசினுக்கு டிரஸ் தைக்க துணி பத்தவில்லையாம். அதனால் தான் பின்னாடி கயிறு மட்டும் வைத்து அட்ஜஸ் செய்துள்ளனர்.

அர்ஜுன் ராம்பல்

அர்ஜுன் ராம்பல்

அர்ஜுன் அவர் வாட்டுக்கு நாய்க்குட்டியுடன் பேசிக் கொண்டிருக்கிறார்.

தீபிகா படுகோனே

தீபிகா படுகோனே

பாவம் தீபிகாவுக்கு முழுசா தைக்காத டிரஸ்ஸைக் கொடுத்து போடச்சொல்லியுள்ளார்கள் போன்று.

ரித்திக் ரோஷன்

ரித்திக் ரோஷன்

சிக் பேக்கில் சும்மா கும்முன்னு இருக்கார் ரித்திக்.

பிபாஷா பாசு

பிபாஷா பாசு

முழுதாக டிரஸ் போடும் முன்பே உள்ளாடையுடன் போஸ் கொடுக்க வந்துவிட்டார் பிப்ஸ்.

ஷாருக்கான்

ஷாருக்கான்

கடவுளே எனக்கு இந்த ஆண்டு நல்ல ஆண்டாக இருக்கட்டும் என்கிறாரோ ஷாருக்.

கஜோல்

கஜோல்

இரண்டு குழந்தைகளுக்கு தாயான பிறகும் அழகு கூடிக்கொண்டே போகிறது கஜோலுக்கு.

பர்ஹான் அக்தர்

பர்ஹான் அக்தர்

எக்ஸ்க்யூஸ் மீ பர்ஹான் ஹேர் கட் பண்ண மறந்துட்டீங்களா?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X