பிள்ளையார்பட்டி ஹீரோ நீதான் பா.. விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் சாங் !
சென்னை : இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி எளிமையான முறையில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
Recommended Video
இந்நிலையில் விநாயகர் சதுர்த்திக்கு பிரமாண்ட சிலைகளும், கொழுக்கட்டை, சுண்டல் உள்ளிட்ட பிரசாதங்களும் எவ்வாறு புகழ் பெற்றதோ அதே போன்று திரைப்படங்களில் இடம்பெறும் விநாயகர் பாடல்களும் மிகவும் பிரபலமானவை.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் இன்று வரை பல்வேறு விநாயகர் பாடல் வந்தாலும் நடிகர் அஜித் நடித்திருந்த வான்மதி திரைப்படத்தில் இடம் பெறும் பிள்ளையார் பட்டி பாடல் ஒலிக்காமல் இன்றுவரை தமிழ்நாட்டில் எந்த ஒரு இடத்திலும் விநாயகர் சதுர்த்தி முழுமை பெறுவதில்லை.

மிக்க மகிழ்ச்சியுடன்
ஆகஸ்ட் 22 ஆம் தேதியான இன்று நாடு முழுவதும் ஜாதி மதம் மொழி பேதமில்லாமல் அனைவரும் ஒற்றுமையுடன் விநாயகர் சதுர்த்தி திருநாளை மிக்க மகிழ்ச்சியுடன் குடும்பத்தாருடன் கொண்டாடி வருகின்றனர்.

பிரமாண்ட சிலைகள்
இவ்வாறு ஒவ்வொரு விநாயகர் சதுர்த்தியன்றும் அனைவரும் தங்களது வீடுகளிலும் தெருக்களிலும் விநாயகரின் பிரமாண்ட சிலைகளை வைத்தும், இயற்கை முறையில் மண்ணால் ஆன சிலைகளை வைத்தும் வழிபட்டு தங்களது கொண்டாட்டங்களை வெளிப்படுத்தி வந்தனர்.

பிள்ளையார்பட்டி ஹீரோ நீதான் பா
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களின் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தல அஜித் நடித்த வான்மதி திரைப்படத்தில் வரும் "பிள்ளையார்பட்டி ஹீரோ நீதான் பா" பாடல் ஒலிக்காத விநாயகர் சதுர்த்தி இன்றுவரை முழுமை பெறுவது இல்லை.

மறக்காமல் இடம்பெறும்
காதல் கோட்டை என்ற மெகாஹிட் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் அகத்தியன் இயக்கியிருந்த வான்மதி திரைப்படத்தில் அஜித் மற்றும் சுவாதி இருவரும் லீட் ரோலில் நடித்து இருக்க, சுவாதியை காதலிக்க வைக்க பிள்ளையாரிடம் தனது காதலுக்கு தூது போகச்சொல்லி அஜித் பாடும் இந்த "பிள்ளையார்பட்டி ஹீரோ நீதான் பா" பாடல் தேனிசைத் தென்றல் தேவாவின் இசையில் உருவாகி பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது மட்டுமல்லாமல் ஒவ்வொரு விநாயகர் சதுர்த்திக்கும் மறக்காமல் இடம்பெறும் ஒரு முக்கிய பாடலாக மாறியுள்ளது.

நினைவுக்கு வருகிறது
இவ்வாறு விநாயகர் சதுர்த்தி என்ற பெயரைக் கேட்டவுடனேயே நாம் அனைவருக்கும் பிள்ளையார் சிலை கொழுக்கட்டை என்பதை தொடர்ந்து அடுத்த இடத்தில் பிள்ளையார்பட்டி ஹீரோ நீதான் பா என்ற பாடல் மட்டுமே நினைவுக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications