பிங்க் தெலுங்கு ரீமேக் வக்கீல் சாப்.. பர்ஸ்ட் லுக் போஸ்டர்!
ஹைதராபாத்: பிங்க் படத்தின் தெலுங்கு ரீமேக் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.
ஒரு திரைப்படம் ஒரு மொழியில் ஹிட் ஆனால் அதனை மற்ற மொழிகளில் ரீமேக் செய்வது வழக்கம். அந்த வகையில் இந்தியில் அமிதாப் பச்சன் நடித்த திரைப்படம் தான் இந்த "பிங்க்" இது தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது அதில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிக்கிறார்.

இந்த பிங்க் திரைப்படம் இந்தி திரையுலகில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது, மற்றும் வசூலில் பல சாதனைகளை புரிந்தது. அமிதாப் பச்சன் அவ்வளவு ஈடுபாட்டுடன் நடித்து இருப்பார் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி அந்த னோ என்று ஆரம்பிக்கும் வார்த்தை அற்புதம்.

இதே படத்தை தமிழில் அஜித்தை வைத்து எடுக்க எண்ணினார் தயாரிப்பாளர் போனி கபூர், அதுவும் கை கூடியது கடந்த வருடத்தின் பிரம்மாண்ட வெற்றி பெற்ற திரைப்படத்தில் நேர் கொண்ட பார்வையும் ஒன்று. அமிதாப் பச்சன் நடிப்பை தமிழில் எப்படி அஜித் செய்யப் போகிறார் என்ற கேள்வி கோலிவுட் வட்டாரத்தில் எழுந்தது. அதனை எல்லாம் தூக்கி எறியும் அளவிற்கு தனது வித்தியாசமான நடிப்பை வெளிபடுத்தினார் அஜித். தமிழுக்கு ஏற்றவாறு சில பல காட்சிகள் மற்றும் பாடல் என வைத்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் படமாக கொடுத்தார் இயக்குனர் வினோத்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு தகவல் வைரல் ஆனது. பிங்க் தெலுங்கு ரீமேக்கில் பவர் ஸ்டார் நடிக்கிறார் என்று கூறப்பட்டது. அது தற்போது உண்மை ஆகியுள்ளது, இதில் பவன் கல்யாண் நடிக்கிறார் மேலும் இந்த படத்தை ஸ்ரீராம் வேனு இயக்குகிறார் தமன் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார், தமிழை போல தெலுங்கிலும் போனி கபூர் இப்படத்தை வழங்குகிறார்.

Recommended Video
தமிழில் எப்படி அஜித் அது போல தெலுங்கில் பவன் கல்யாண் இவரை போல அவர் அவரை போல இவர் என்று தான் பலரும் கூறுவார்கள். தமிழில் ஒரு மாஸ் ஹீரோ இது போன்ற ஒரு கதையை கூறினால் தான் ரசிகர்கள் இதனை ஒத்து கொள்வார்கள் அது போல தெலுங்கிலும் பவன் கல்யாண் போன்ற ஒருவர் இது போன்ற படங்களில் நடிக்கும் போது ரசிகர்கள் அதனை கொண்டாடுவார்கள், படத்திற்கு வக்கீல் சாப் என்று தலைப்பு வைத்துள்ளனர். பர்ஸ்ட் லுக் வெளியானது முதல் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











