பிசாசு 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீட்டு தேதி அறிவிப்பு!
சென்னை : இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு படத்தின் இரண்டாவது பாகம் இப்போது உருவாகி வருகிறது.
நடிகை ஆண்ட்ரியா இதில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி,பூர்ணா ,சந்தோஷ் பிரதாப், அஜ்மல் என பலர் இதில் நடிக்கின்றனர்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் இப்படத்தில் இருந்து ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீட்டு தேதியை இப்பொழுது படக்குழு அறிவித்துள்ளது.

டார்க் பாணியில்
தமிழ் சினிமாவில் தனித்துவமான படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வரும் இயக்குனர் மிஷ்கின் இப்பொழுது பிசாசு படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்கி வருகிறார். இருட்டு,கை ,கால்கள், அமைதியான சூழல் என தன்னுடைய படங்களில் வித்தியாசமான ஷாட்டுகளை வைத்து அதில் வெற்றிகளைப் பெற்றுவந்த மிஷ்கின் வழக்கமான டார்க் பாணியுடன் இணைத்து பேயையும் காட்டியிருந்த திரைப்படம் பிசாசு.

பேய்களுக்கும் அன்பு
அதுவரை வெளியான பேய் படங்கள் என்றாலே அனைவரும் பயமுறுத்தும், மிரட்டும் எனக்காட்டி வந்த சூழலில் மிஷ்கின் மட்டும் பேய்களுக்கும் அன்பு,பாசம்,உணர்ச்சி உள்ளது என வித்தியாசமாக யோசித்து ரசிகர்கள் மத்தியில் கைத்தட்டல்களை பெற்றிருந்தார். இதில் கதாநாயகிக்கு அப்பாவாக நடித்திருந்த ராதாரவியின் நடிப்பு அதிக அளவில் பேசப்பட்டது.

ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில்
பிசாசு பாகம் 1ன் வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாவது பாகம் உருவாகி வருகிறது. இந்த படமும் ஹாரர் கதை களத்தில் உருவாகி வர இதன் படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிகை ஆண்ட்ரியா நடிக்க பூர்ணா, விஜய் சேதுபதி, அஜ்மல் மற்றும் சந்தோஷ் பிரதாப் என பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ராக்போர்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

உறவின் பாட்டு "உச்சந்தல ரேகையிலே"
இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழில் இசையமைக்கும் கார்த்திக் ராஜாவின் இசையில் பிசாசு 2ன் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது வெளியாகிறது என்ற அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி அக்டோபர் 2ஆம் தேதி பிசாசு 2 படத்தின் முதல் சிங்கிள் உறவின் பாட்டு "உச்சந்தல ரேகையிலே" வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஆடியோ உரிமையை சரிகம நிறுவனம் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











