ஆன்ட்ரியா படத்திற்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு... அடுத்தடுத்த அப்டேட் கொடுக்கும் படக்குழு!
சென்னை : நடிகை ஆன்ட்ரியா, விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் பிசாசு 2. இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து ரிலீசுக்கு படம் தயாராகி வருகிறது. இந்நிலையில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை கொடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது படக்குழு.

இயக்குநர் மிஷ்கின்
தொடர்ந்து சிறப்பான படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தன்னை முன்னணி இயக்குநராக நிலைநிறுத்தியுள்ளார் மிஷ்கின். இவரது திரைக்கதை படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் முக்கியத்துவம் பெற்றுவிடும். அந்த வகையில் அவர் இயக்கத்தில் வெளியான பிசாசு படம் பேய்ப்படங்களின் வரிசையில் வித்தியாசமாக அமைந்தது.

ஹாரர் த்ரில்லர் படம்
ஹாரர் த்ரில்லர் படமாக வெளியான இந்தப்படத்தின் பாடலும் சிறப்பான வரவேற்பை பெற்றது. இசையும் சிறப்பாக அமைந்தது. இதையடுத்து தற்போது பிசாசு 2 படத்தை இயக்கி முடித்துள்ளார் மிஷ்கின். இந்தப் படத்தில் ஆன்ட்ரியா முக்கியமான ரோலில் நடித்துள்ளார். படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றது.

முக்கிய கேரக்டரில் விஜய் சேதுபதி
படத்தில் விஜய் சேதுபதியும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ராக்போர்ட் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. படத்தில் மேலும் பூர்ணா, சந்தோஷ் பிரதாப், நமீதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கார்த்திக் ராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார்.

கன்னட திரையரங்க உரிமை
படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய 4 மொழிகளில் ரிலீசாக உள்ளது. நாளைய தினம் மாலை 5 மணிக்கு படத்தின் டீசர் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தற்போது பிசாசு 2 திரைப்படத்தின் கன்னட திரையரங்க வெளியீட்டு உரிமையை கமர் பிலிம் பேக்டரி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை ஆன்ட்ரியா
நடிகை ஆன்ட்ரியா வித்தியாசமான கேரக்டர்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில் இந்தப் படத்தின் போஸ்டர்களில் அவர் சிறப்பாக காணப்படுகிறார். மேலும் சமீபத்திய பேட்டியில் இந்தப் படத்தில் வெறித்தனமாக நடித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











