பிசாசு 2..நல்ல செய்தி சொன்ன மிஷ்கின்..மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

சென்னை : நடிகை ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பிசாசு 2 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது.

இந்த படத்தில் ஆண்ட்ரியா, பூர்ணா, சந்தோஷ் பிரதாப், நமிதா கிருஷ்ணா மூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இப்படத்தின் ப சிவா சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார்.

பிசாசு

பிசாசு

துப்பறிவாளன் 2 படத்தில் விஷாலுடன் ஏற்பட்ட மோதலால் அப்படத்திலிருந்து விலகிய மிஷ்கின் பிசாசு 2 படத்தை இயக்கி வருகிறார். இது 2014-ல் பாலாவின் பி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் மிஷ்கின் இயக்கிய பிசாசு படத்தின் இரண்டாம் பாகமாகும். முதல் பாகத்தில் நாகா, பிரகையா மார்டின், ராதாரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

வித்தியாசமான பேய்

வித்தியாசமான பேய்

வழக்கமாக பேய் திரைப்படம் என்றால் அந்த திரைப்படத்தில் பேய் அனைவரையும் கொல்லும், பயமுறுத்தும். ஆனால் பிசாசு படத்தில், நல்லது செய்யும் பேய் என ஒரு விசித்திரமான கதையை நமக்கு கொடுத்து இருப்பார் மிஷ்கின். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இல்ல வரவேற்பை பெற்றது.

விறுவிறுப்பான படப்பிடிப்பு

விறுவிறுப்பான படப்பிடிப்பு

இதையடுத்து பிசாசு 2 படத்தில் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் முதற்கட்ட படபிடிப்பு பொள்ளாச்சியில் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு நடைபெற்றன. ராக்போர்ட் எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார்.

பிசாசு 2 ரிலீஸ் தேதி

பிசாசு 2 ரிலீஸ் தேதி

இந்நிலையில், பிசாசு-2 திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் நாள், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழ், தெலுங்கு, கன்னடம்,மலையாளம் உள்ளிட்ட 4 மொழிகளில் ரிலீசாக உள்ளது. இதனை புதிய போஸ்டரை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இந்த போஸ்டரில் சிவப்பு நிற உடையில் ஆண்ட்ரியா காட்சியளிக்கிறார். இந்த படத்தின் தெலுங்கு பதிப்புக்கு முதல் முறையாக நடிகை ஆண்ட்ரியா சொந்த குரலில் டப்பிங் பேசியுள்ளார். இந்த படத்தின் தெலுங்கு பதிப்புக்கு பிசாசி-2 என பெயரிடப்பட்டுள்ளது.

Recommended Video

Mysskin தலைமையில் இந்திய ஜப்பான் நல்லுறவின் 70th anniversary |*Kollywood
விருது நிச்சயம்

விருது நிச்சயம்

மேலும், பிசாசு 2 படத்தில் ஆண்ட்ரியா நிர்வாணமாக சில காட்சிகளில் நடித்து இருக்கிறார். இந்த படம் நிச்சயம் வெற்றி பெரும், மேலும் இப்படத்தில் நடித்ததற்காக ஆண்ட்ரியாவுக்கு தேசிய விருதும் கிடைக்கும் என்று மிஷ்கின் கூறியிருந்தார்.இதனால், இந்த படத்தைக்காண ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X