கையபுடிச்சி யாரும் இழுக்க மாட்டாங்க..பட வாய்ப்புக்காக வழிஞ்சா.. இது நான் நடக்கும்.. சங்கீதா பேட்டி!
சென்னை: 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்த சங்கீதா, பிதாமகன், உயிர், தனம் போன்ற திரைப்படங்களில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து பெயர் எடுத்துள்ளார்.
அண்மையில் வெளியான வாரிசு படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள நடிகை சங்கீதா அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து வெளிப்படையாக பேசி உள்ளார்.

நடிகை சங்கீதா பேட்டி: அவர் அளித்துள்ள பேட்டியில், விருப்பம் இல்லாதவர்களை, யாரும் கையபுடிச்சி யாரும் இழுக்க மாட்டாங்க, அந்த அளவுக்கு யாருக்கும் தைரியம் இல்ல. நாம மற்றவர்களிடம் எப்படி பழகுகிறார் என்பதில் தான் விஷயம் இருக்கு, நாம சரியாக பழகினால், மற்றவர்களும் நம்மிடம் சரியாக பழகுவார்கள். படவாய்ப்பு தராங்கனு வழஞ்சிட்டு,சிரிச்சிட்டு நின்ன, இவங்க நம்ம எது சொன்னலும் செய்வோம் என்று தவறாக நினைத்துவிடுவார்கள்.
பட வாய்ப்புக்காக வழிஞ்சா: இதனால், நாம சரியாக இருக்கனும், இதுதான் நான், படவாய்ப்பு கொடுத்தா கொடுங்க, இல்லனா வேண்டாம் என்று நாம தெளிவா இருந்தா, யார் நம்ம விட்ட வந்து தப்பா நடந்துப்பாங்க. என்கிட்ட யாரும் அப்படி தவறாக நடந்து கொள்ளவில்லை. அதையும் மீறி ஒரு சில விஷயம் நடந்தப்போ, எனக்கு அதில் விருப்பம் இல்லை என்பதை தெளிவாக அவர்களிடம் நான் சொல்லிவிடுவேன்.

பிதாமகன்: இதையடுத்து பிதாமகன் படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசிய சங்கீதா, அந்த படத்தில் பாலா சார் என்ன செய்ய சொன்னாரோ அதை காதில் வாங்கிக்கொணடு அப்படியே நடித்தேன். ஆனால், மீண்டும் அதே கதாபாத்திரத்தில் அதே போல என்னால மீண்டும் நடிக்க முடியுமானு எனக்குத் தெரியவில்லை. அதற்கு காரணம் பாலா சார் தான் காரணம் என்றார்.
காதல் திருமணம்: இவர் பிரபல பின்னணி பாடகர் க்ரிஷை காதலித்து கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதிக்கு அழகான மகள் இருக்கிறார். தற்போது இவர் சினிமாவில் நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











