இயக்குநர் பாலாவை கொலை செய்ய திட்டம் - பரபரப்பை கிளப்பிய பிரபலம்

சென்னை: இயக்குநர் பாலா செய்த டார்ச்சர் தாங்க முடியாமல் அவரை பிதாமகன் தயாரிப்பாளர் மலையிலிருந்து தள்ளிவிட நினைத்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது.

பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக இருந்தவர் பாலா. பாலாவை பாலுமகேந்திரா தனது மூத்த மகன் என்றே அழைப்பார். அந்த அளவுக்கு அவருடன் நெருக்கமாக இருந்தவர் பாலா. வண்ண வண்ண பூக்கள் உள்ளிட்ட படங்களில் பாலுமகேந்திராவிடம் பணியாற்றிவிட்டு சேது படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பாலா.

சேதுவாக மாறிய அகிலன் திரைப்படம்

சேதுவாக மாறிய அகிலன் திரைப்படம்

பாலா முதலில் அகிலன் என்ற படத்தை இயக்குவதாக இருந்தது. அதில் நடிப்பதற்கு முரளியிடமும் கால்ஷீட் வாங்கிவிட்டார். படத்துக்கான பூஜை போடப்பட்ட பிறகு ஏதோ ஒரு காரணத்தால் படம் நின்றுபோக; நீண்ட நாள்கள் கழித்து விக்ரமிடம் அந்தக் கதையை கூறினார் பாலா. எனவே அகிலன் படம் சேதுவாக மாறியது.

மெகா ஹிட்டான சேது திரைப்படம்

மெகா ஹிட்டான சேது திரைப்படம்

இளையராஜா இசையமைப்பில் விக்ரம், சிவக்குமார், ஸ்ரீமன் உள்ளிட்டோர் நடித்த அந்தப் படம் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. தனது நண்பருக்கு நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து சேது கதையை அமைத்திருந்தார் பாலா. சேது பெரும் வரவேற்பைப் பெற்றதை அடுத்து அதுவரை சினிமாவில் நிலையான இடத்தை பிடிக்க போராடிக்கொண்டிருந்த விக்ரமுக்கு சினிமாவில் தனி இடம் கிடைத்தது. பாலாவும் முதல் படத்திலேயே கவனிக்கப்படக்கூடிய இயக்குநராக மாறினார். அடுத்ததாக சூர்யாவை வைத்து நந்தா படத்தை பாலா இயக்க; அந்தப் படமும் விமர்சன ரீதியாக ஹிட்டாக சூர்யாவுக்கும் நிலையான இடம் சினிமாவில் கிடைத்தது.

விருது வென்ற பிதாமகன்

விருது வென்ற பிதாமகன்

தனது மூன்றாவது படமாக பிதாமகன் படத்தை இயக்கினார் பாலா. விக்ரம், சூர்யா இணைந்து நடித்த அந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்க விமர்சன ரீதியாக படம் சிறப்பான வரவேற்பைப் பெற்றது. விக்ரமுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது. படத்தை துரை என்பவர் தயாரித்திருந்தார்.

பாலா மீது துரை வைத்த குற்றச்சாட்டு

பாலா மீது துரை வைத்த குற்றச்சாட்டு

பிதாமகன் படம் இயக்குநருக்கும், நடிகருக்கும் பெயரை பெற்று தந்தாலும் தயாரிப்பாளரின் கையை கடித்துவிட்டது. இதனையடுத்து அனைத்திலும் நொடிந்துபோன துரை ஒருகட்டத்தில் சினிமாவிலிருந்து காணாமல்போனார். இந்தச் சூழலில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், மருத்துவ செலவுக்குக்கூட பணம் இல்லாமல் படுத்த படுக்கையாக இருப்பதாகவும், பிதாமகன் படம் ஏற்படுத்திய நஷ்டத்தை ஈடுகட்ட இன்னொரு படம் இயக்கி தருவதாக கூறி பாலா தன்னிடம் 25 லட்சம் ரூபாய் வாங்கி திருப்பி தரவில்லை எனவும் கூறியிருந்தார். மேலும், அந்தப் பணத்தை மீண்டும் தரும்படி பாலாவிடம் கோரிக்கையும் வைத்திருந்தார் அவர்.

தயாரிப்பாளரை இழுத்தடித்த பாலா

தயாரிப்பாளரை இழுத்தடித்த பாலா

இந்நிலையில் இயக்குநர் பாலாவை பிதாமகன் தயாரிப்பாளர் மலையிலிருந்து கீழே தள்ளிவிட திட்டம் தீட்டியதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது, பிதாமகன் கதையை தயார் செய்ய தயாரிப்பாளரிடம் பெரிய ஹோட்டலில் ரூம் புக் செய்ய சொல்லியிருக்கிறார் பாலா. ஆனால் பல மாதங்கள் கழித்தும் தயாரிப்பாளரிடம் கதையை கூறவில்லையாம். இதுகுறித்து பாலாவிடம் தயாரிப்பாளர் கேட்டதற்கு கதையெல்லாம் கூறமுடியாது என்று சொல்லிவிட்டாராம். இதனால் தயாரிப்பாளர் தரப்பு கடும் அப்செட் ஆகியுள்ளது.

பாலாவை கொலை செய்ய திட்டம் தீட்டிய தயாரிப்பாளர்

பாலாவை கொலை செய்ய திட்டம் தீட்டிய தயாரிப்பாளர்

கதையை கூற முடியாது என்று சொல்லியது மட்டுமில்லாமல் தயாரிப்பாளர் ஷூட்டிங் ஸ்பாட் வரக்கூடாது என்றும் கண்டிஷன் போட்டிருக்கிறார் இயக்குநர். இதனால் கோபத்தின் உச்சத்துக்கு சென்ற தயாரிப்பாளரும், நண்பரும் ஒருமுறை ஷூட்டிங் ஸ்பாட் சென்றிருக்கிறார்கள். அப்போது மலை உச்சியில் நின்றுகொண்டிருந்த பாலாவை அவரது டார்ச்சரை தாங்கமுடியாமல் அங்கிருந்து தள்ளிவிட்டுவிடலாம் என நினைத்திருக்கிறார்கள். அச்சமயத்தில் அவர்களை பார்த்த பாலா நீங்கள் இங்கு இருந்தால் படம் எடுக்க மாட்டேன்" என சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாராம். இந்த பரபரப்பு தகவலை சினிமா பத்திரிகையாளர் அந்தணன் தெரிவித்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X