அடக்கடவுளே.. பிதாமகன் தயாரிப்பாளருக்கு இப்படி ஒரு நிலைமையா? உதவிய சூர்யா!

சென்னை : பிதாமகன் பட தயாரிப்பாளர் விஏ துரை மருந்து வாங்கக்கூட காசு இல்லாமல் உதவி கேட்டு சோஷியல் மீடியாவில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

பாலா இயக்கத்தில் விக்ரம், சூர்யா இணைந்து நடித்த பிதாமகன் படத்தை தயாரித்தவர், எவர் கிரின் மூவிஸ் விஏ துரை.

இவர் சத்தியராஜ் நடித்த என்னம்மா கண்ணு, விஜயகாந்த் நடிப்பில் கஜேந்திரா, ரஜினி தயாரித்த பாபா படத்தின் தயாரிப்பு நிர்வாகி என ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கொடி கட்டிப் பறந்தவர்.

தயாரிப்பாளர் வி ஏ துரை

தயாரிப்பாளர் வி ஏ துரை

தயாரிப்பாளர் வி ஏ துரை, விஜய்காந்த்தை வைத்து கஜேந்திரா என்ற படத்தை தயாரித்திருந்தார். 2004ம் ஆண்டு வெளியான இந்த படத்தில், சீதா, சரத்குமார், ராதா ரவி, வினுசக்கரவர்த்தி என ஏராளமானோர் நடித்திருந்தனர். பெரும் பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படம் பெரும் நஷ்டத்தை சந்தித்தது.

கடனாளி ஆனார்

கடனாளி ஆனார்

கஜேந்திரா படத்தால் கடனாளியானதால், புதிதாக படம் தயாரிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார் விஏ துரை. கடந்த பத்து வருடமாக மனைவி மற்றும் தனது ஒரே மகளை பிரிந்து, கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம், பொருட்களை இழந்து சாலிகிராமத்தில் உள்ள அவரது நண்பர் ஒருவரின் வீட்டில் வாழ்வாதாரத்தை இழந்து வசித்து வருகிறார்.

உருக்கமான வீடியோ

உருக்கமான வீடியோ

இந்நிலையில் தயாரிப்பாளர் வி.ஏ துரையின் நண்பர் வெளியிட்டுள்ள வீடியோவில், விஏ துரை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். இவரது காலில் உள்ளே எலும்பு தெரியும் அளவிற்கு புண்கள் ஏற்பட்டு இருக்கிறது. கால்கள் கொஞ்சம் கொஞ்சமாக அரித்து வருகிறது. இவரை பார்த்துக்கொள்ளக்கூட ஆள் இல்லாத மோசமான நிலைமையில் இருக்கிறார்.

மருந்து வாங்கக்கூட காசு இல்லை

மருந்து வாங்கக்கூட காசு இல்லை

சர்க்கரை வியாதிக்கு மருந்து வாங்குவதற்கு கூட காசு இல்லாமல் தவித்து வருகிறார். அதனால் யாராவது இவருக்கு உதவி செய்யுங்கள் என்று இந்த வீடியோவில் வி.ஏ துரையின் நண்பர் வேதனையுடன் பேசி இருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து, பல ஹிட் படங்களை தயாரித்து கோடிகளில் வாழ்ந்த இவருக்காக இந்த நிலைமை என நெட்டிசன்கள் புலம்பி வருகின்றனர். இந்த தகவலை கேள்விப்பட்ட உடன் நடிகர் சூர்யா மருத்துவ செலவுக்காக ரூபாய் 2 லட்சம் கொடுத்து உதவி செய்து உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X